இயற்கையான ஹேர் டை: தேங்காய் சிரட்டை வைத்து இப்படி ரெடி பண்ணுங்க; டாக்டர் நித்யா
பலரும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஹேர் டை வீட்டிலேயே செய்வது எப்படி என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக டாக்டர் நித்யா, தேங்காய் சிரட்டை வைத்து வீட்டிலேயே இயற்கையான ஹேர் டை செய்வது எப்படி என்று கூறியுள்ளார்.
பலரும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஹேர் டை வீட்டிலேயே செய்வது எப்படி என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக டாக்டர் நித்யா, தேங்காய் சிரட்டை வைத்து வீட்டிலேயே இயற்கையான ஹேர் டை செய்வது எப்படி என்று கூறியுள்ளார்.
தேங்காய் சிரட்டை வைத்து வீட்டிலேயே இயற்கையான ஹேர் டை செய்வது எப்படி என்று டாக்டர் நித்யா தனது டாக்டர் நித்யாஸ் வரம் (Dr.Nithya's Varam) என்ற யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
மனிதர்களுக்கு தலைக்குமேல் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், அவர்களை மன ரீதியாக நம்பிக்கை இழக்க வைக்கும் ஒரு பிரச்னை என்றால் அது முடி உதிர்தல், நரை முடிதான். நரை முடி இருந்தால், அவற்றை கருமையாக டை அடித்துக்கொள்கிறார்கள். சிலருக்கு ஹேர் டை அலர்ஜியை ஏற்படுத்தும். அதனால், அவர்கள் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஹேர் டை வீட்டிலேயே செய்வது எப்படி என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக டாக்டர் நித்யா, தேங்காய் சிரட்டை வைத்து வீட்டிலேயே இயற்கையான ஹேர் டை செய்வது எப்படி என்று கூறியுள்ளார்.
Advertisment
தேங்காய் சிரட்டை வைத்து வீட்டிலேயே இயற்கையான ஹேர் டை செய்வது எப்படி என்று டாக்டர் நித்யா தனது டாக்டர் நித்யாஸ் வரம் (Dr.Nithya's Varam) என்ற யூடியூப் சேனலில் கூறியுள்ளார். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
இயற்கையான ஹேர் டையை ரொம்ப எளிமையாக சில மூலிகைகளை வைத்து தயார் செய்யலாம் என்று கூறும் டாக்டர் நித்யா, இதற்கு அவுரி பொடி, தேங்காய் சிரட்டை, அடுப்பில் எரித்து கரியாக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும், மருதாணிப் பொடி, திரிபலா பொடி, (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவை மூன்றும் சேர்ந்த பொடி) எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை எலுமிச்சை சாறுவிட்டு கலந்து ஒருநாள் இரவு முழுவதும் இருக்க வேண்டும்.
Advertisment
Advertisements
மறுநாள் காலையில், இவற்றில் தண்ணீர் கலந்து தலையில் தடவிக்கொள்ள வேண்டும். 2-3 மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு, பிறகு தலையை அலச வேண்டும். அடுத்த நாளும் இதை தடவ வேண்டும். இதை வாரத்திற்கு 2 நாள் பயன்படுத்தும்போது, நரை முடி கருமையாக மாறுவதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.
அதே போல, நாம் சாப்பிடக்கூடிய உணவில் இரும்புச் சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உணவுகள் சாப்பிட வேண்டும். பீட்ரூட், நெல்லிக்காய் ஜூ, வாழைப்பூ ஜூஸ், ஆவாரம்பூ ஜூஸ் அல்லது டீ குடிக்கலாம் என்று பரிந்துரைக்கிறார்.