இந்தப் பொடி அரை ஸ்பூன் பாலில் போட்டு... பக்க விளைவு இல்லாத பக்கா தூக்க மருந்து: டாக்டர் நித்யா அட்வைஸ்
இரவில் நன்றாக தூங்குவதற்கு அஸ்வகந்தா சூரணம் மற்றும் தண்ணீர்விட்டான் சூரணம் பொடி அரை ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டால் நன்றாகத் தூங்கலாம். இது பக்க விளைவு இல்லாத பக்கா தூக்க மருந்து என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.
இரவில் நன்றாக தூங்குவதற்கு இந்த பொடி அரை ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டால் நன்றாகத் தூங்கலாம். இது பக்க விளைவு இல்லாத பக்கா தூக்க மருந்து என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.
நிம்மதியான வாழ்க்கை என்பது நிம்மதியான தூக்கம்தான். ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்க வேண்டும். ஆனால் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருப்பார்கள். சிலர் இரவும் முழுவதும் செல்போன் பார்த்துக்கொண்டே தூக்கத்தை தொலைப்பார்கள். ஒருவருக்கு சரியான தூக்கம் இல்லாவிட்டால், அவர்களுக்கு பல நோய்கள் வந்து சேரும். அதனால், இரவில் செல்போனை வைத்துவிட்டு தூங்க முயற்சி செய்யுங்கள்.
Advertisment
சிலர் தூங்கும்போதுதான் என்னென்னவோ சிந்தனைகள் ஓடுகிறது. அதனால், தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரை போட்டுக்கொண்டு உறங்குகிறார்கள். இதனால், பக்க விளைவுகள் ஏற்படுகிறது. அவர்களால் தூக்க மாத்திரை இல்லாமல் இயல்பாக தூங்க முடியாமல் போகிறது.
சரியான தூக்கம் இல்லாவிட்டால், நாளடைவில் அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அல்சர் போன்றவை வர வாய்ப்பு உள்ளது என்று டாக்டர் நித்யா கூறுகிறார். அதனால், இரவில் நன்றாக தூங்குவதற்கு அஸ்வகந்தா சூரணம் மற்றும் தண்ணீர்விட்டான் சூரணம் பொடி அரை ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டால் நன்றாகத் தூங்கலாம். இது பக்க விளைவு இல்லாத பக்கா தூக்க மருந்து என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.
சிலருக்கு கை, கால் வலி இருக்கும். அதனாலும், தூக்கம் வராமல் போகும். அவர்கள் படுக்கைக்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு, ஜாதிக்காய் லேகியம் சாப்பிட்டுவிட்டு 1 டம்ப்ளர் பால் குடித்துவிட்டு படுக்கைக்கு சென்றால், கை, கால் வலி இல்லாமல் தூங்கலாம் என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.
Advertisment
Advertisement
அதே போல, தூக்கம் வரவில்லை என்றால் அஸ்வகந்தா சூரணம் மற்றும் தண்ணீர்விட்டான் சூரணம் இரண்டையும் தலா அரை ஸ்பூன் எடுத்து, படுக்கைக்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன் சாப்பிட்டால் தூக்கம் நன்றாக வரும் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.