முகத்தில் கட்டிகள் இருக்கா? இந்த தைலம் போதும்! டாக்டர் நித்யா
உடலில் இருக்கும் கொழுப்பு கட்டிகள், முகத்தில் இருக்கும் கட்டிகள் கரைய டாக்டர் நித்யா ஒரு தைலத்தை பரிந்துரைக்கிறார். அது என்ன தைலம் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்ப்பொம்.
“உடலில் இருக்கக்கூடிய கட்டிகள், லைபோமா என்று சொல்லக்கூடிய கொழுப்பு கட்டிகள் மற்றும் தேவை இல்லாமல் முகத்தில் வரக்கூடிய ஆக்னி வல்காரிஸ் (Acne vulgaris) என்று சொல்லக்கூடிய கட்டிகள் இருந்தால் இந்த தைலம் பயன்படுத்தலாம்” என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.
பலருக்கும் கொழுப்பு கட்டிகள், முகத்தில் கட்டிகள் ஏற்படுகின்றன. இதனால், வலி எதுவும் இல்லை என்றாலும், அந்த கட்டிகள் அவர்களை ஒரு அசௌகரியமாக உணரவைக்கிறது. இதனால், கொழுப்பு கட்டிகள், முகத்தில் இருக்கும் கட்டிகள் கரைய டாக்டர் நித்யா ஒரு தைலத்தை பரிந்துரைக்கிறார்.
Advertisment
முகத்தில் இருக்கும் கட்டிகளுக்கும் உடலில் இருக்கும் கொழுப்பு கட்டிகளுக்கு அருமையான தைலம் இது என்று மிஸ்டர் லேடீஸ் யூடியூப் சேனலில் டாக்டர் நித்யா கூறுகிறார். அது என்ன தைலம் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்ப்பொம்.
டாக்டர் நித்யா கூறுகையில், “உடலில் இருக்கக்கூடிய கட்டிகள், நிறைய பேருக்கு லைபோமா (Lipoma) என்று சொல்லக்கூடிய கொழுப்பு கட்டிகள் இருக்கும். அல்லது தேவை இல்லாமல் முகத்தில் வரக்கூடிய ஆக்னி வல்காரிஸ் (Acne vulgaris) என்று சொல்லக்கூடிய கட்டிகள் இருந்தால் விராலி தைலம் பயன்படுத்தலாம்” என்று கூறுகிறார்.
Advertisment
Advertisements
விராலி தைலம் குறித்து டாக்டர் நித்யா கூறுகையில், “பொதுவாக விராலி என்று சொல்லக்கூடிய மூலிகைக்கு கேன்சர் கட்டிகளையே குணப்படுத்தக்கூடிய ஆற்றல் இருக்கிறது. விராலி எண்ணெய், விராலி தைலம் என்று சொல்கிறோம், இந்த மருந்து கொழுப்புக் கட்டி இருக்ககூடிய நபர்களுக்கு ரொம்ப அருமையான ஒரு தீர்வாக இருக்கும். விராலி எண்ணெய்யை எடுத்துக்கொண்டு அதில் மிளகு அளவு சுண்ணாம்பு கலந்து எங்கெல்லாம் கட்டிகள் இருக்கிறதோ, லைபோமோ என்று சொல்லக்கூடிய கொழுப்பு கட்டிகள் இருக்கிறதோ அங்கே நாம் அதைத் தடவி வந்தால், நாளடைவில் இந்த கட்டிகள் மறைய ஆரம்பிக்கும்.
அதே போல, முகத்தில் ஆக்னி வல்காரிஸ் இருக்கிறது, அதிகமான முகப்பருக்கள் ரொம்ப பெரியதாக இருக்கிறது என்றால், இந்த விராலி தைலம் நாம் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்” என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.