ஆனியன் ஜூஸ் தடவினால் முடி வளரும், நிஜமாக முடி வளருமா என்று டாக்டர் பொற்கொடி ஆலோசனை வழங்குகிறார். Image Source: (YouTube/ @drporkodihari) Freepik
ஆனியன் ஜூஸ் தடவினால் முடி உதிர்வைத் தடுக்கும், ஆனால், அதை இப்படி பயன்படுத்தினால் பெரிய ஆபத்தாக முடியும் என்று டாக்டர் பொற்கொடி எச்சரிக்கிறார்.
Advertisment
ஆனியன் ஜூஸ் தடவினால் முடி வளரும், நிஜமாக முடி வளருமா என்று டாக்டர் பொற்கொடி தனது பொற்கொடி ஹரி (@drporkodihari) என்ற யூடியுப் சேனலில் ஆலோசனை வழங்குகிறார்.
ஆனியன் ஜூஸ் தடவினால் முடி வளருமா என்பது குறித்து டாக்டர் பொற்கொடி கூறுகிறார்: “ஆனியன் ஜூஸ் தடவினால் முடி வளரும், உண்மையில் முடி வளருமா, வெங்காயத்தில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான மினரல் சல்பர். இந்த சல்பர் மினரல் அமினோ அமிலத்தோட ஒரு முக்கியமனா மூலக்கூறு. இது முடிக்கு என்ன பண்ணும் என்றால், முடியில் இருக்கின்ற கெராட்டினை நன்றாக உருவாக்கி கட்டமைக்கும். இதனால், முடி வளர்ச்சி அடையும், அதே நேரத்தில் முடியை உறுதியாகவும் ஆக்கும்.
Advertisment
Advertisements
அதே மாதிரி இந்த ஆனியன் ஜூசில் (வெங்கயா சாறு) கேட்டலேஸ் என்ற ஒரு ஆண்டி ஆக்சிடெண்ட் இருக்கிறது. அது முட்யின் வேரில் இருக்கிற ஹைட்ரஜன் பெராக்ஸைடைக் குறைத்து இளம் வயதிலேயே தலைமுடி நரைப்பதைத் தடுக்கும்.
ஆனியன் ஜூசில் கியூசிட்டி என்கிற ஒரு மூலக்கூறு இருக்கிறது. ஆனியன் ஜூஸை நீங்கள் தலையில் தடவினால், ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி முடி வளர்சியைத் தூண்டிவிடும். அதற்காக நிறைய ஆணியன் ஜூஸ் தடவினால், நிறைய முடி வளரும் என்று அதிகப்படியாக ஆனியன் ஜூஸ் தடவாதீகள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதிக அளவில் ஆனியன் ஜூஸ் தடவினால், ஒருவேளை உங்களுக்கு பொடுகு பிரச்னை இருக்கிறது என்றால், அதை இன்னும் அதிகமாக்கிவிடும். அதுமட்டுமில்லாமல் தலையின் தோல்பகுதியை வறட்சியாக்கிவிடும். அதனால், எந்தவொரு பொருளையும் அளவோடு பயன்படுத்துங்கள்.” என்று டாக்டர் பொற்கொடி ஆலோசனை வழங்குகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.