/indian-express-tamil/media/media_files/2025/06/23/rajalakshmi-ringworm-2025-06-23-08-12-23.jpg)
டாக்டர் ராஜலெட்சுமி பல ஆரோக்கிய ஆலோசனைகளை ஏ.எஸ்.எம் இன்ஃபோ (ASM INFO) என்ற யூடியூப் சேனலில் வழங்கி வருகிறார். அந்த வகையில், படர்தாமரையை எப்படி 3 நாட்களில் குணப்படுத்துவது என்று கூறியுள்ளார்.
தேங்காய் எண்ணெயில் இந்த சாறு சேர்த்து தடவுங்கள் படர்தாமரை 3 நாட்களில் மறையும் என்று டாக்டர் ராஜலெட்சுமி ஆலோசனை வழங்கியுள்ளார். தேங்காய் எண்ணெய் உடன் என்ன சாறு கலக்க வேண்டும் எப்படி தயார் செய்ய வேண்டும் என்பது குறித்து பார்ப்போம் வாருங்கள்.
டாக்டர் ராஜலெட்சுமி பல ஆரோக்கிய ஆலோசனைகளை ஏ.எஸ்.எம் இன்ஃபோ (ASM INFO) என்ற யூடியூப் சேனலில் வழங்கி வருகிறார். அந்த வகையில், படர்தாமரையை எப்படி 3 நாட்களில் குணப்படுத்துவது என்று கூறியுள்ளார்.
படர்தாமரையை எப்படி குணப்படுத்துவது என்பது குறித்து டாக்டர் ராஜலெட்சுமி கூறுகையில், “படர்தாமரையை ‘ringworm infection’ என்று கூறுவார்கள். இந்த படர்தாமரை வந்தால், கொஞ்ச நேரம் கையை வைத்துக்கொண்டு சும்மாவே இருக்க முடியாது. படர்தாமரை வந்தால், உடலில் அங்க, இங்க என்று அரிக்கும். அக்குள் பகுதியில் அரிக்கும். தொடை இடுக்குப் பகுதியில் அரிக்கும். பெண்களாக இருந்தால், வயிற்றுக்கும் மார்புக்கும் நடுவில் இருக்கிற மடிப்பு பகுதியில் அரிக்கும். பின்னாடி பிட்டத்தில் அரிப்புகள் ஏற்படும். இந்த படர்தாமரை வட்ட வடிவமாக இருக்கும்.
இந்த படர்தாமரைக்கு 40 வகையான பூஞ்சை தொற்றுகள் காரணமாக இருக்கும். இந்த மாதிரி படர்தாமரை இருக்கிறது என்றால், ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு தொற்றக்கூடிய தன்மை இதற்கு உண்டு. இது இருப்பவர்கள் தங்களுடைய உள்ளாடைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். போர்வைகள் துணிகள் ஷேர் பண்ணுவதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த படர்தாமரை ரொம்ப அரிதாக சிறு குழந்தைகளுக்கு தலையில் இருக்கும்.
இந்த படர்தாமரை இருப்பவர்கள் உள்ளாடைகளை நன்றாகத் துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும். உடலை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அதிக நறுமனம் உள்ள பொருட்களை துணி துவைப்பதற்கு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அதிக வாசனை உள்ள பொருட்கள் பயன்படுத்துவதால் அதன் மூலமாக இந்த பூஞ்சைகள் உருவாக வாய்ப்புள்ளது.
இந்த படர்தாமரை பாதிப்பு உள்ளவர்கள், பூண்டு அரைத்த சாறு பிழிந்து 2 சொட்டு எடுத்துக்கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் 1 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள்.
அதாவது 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் என்றால் அதற்கு 2 சொட்டு பூண்டு சாறு என்ற விகிதத்தில் உங்களுக்கு தேவையான அளவு எடுத்துக்கொள்ளுங்கள். இந்த இரண்டையும் நன்றாகக் கலந்துகொண்டபின், உடலில் எங்கெல்லாம் படர்தாமரை இருக்கிறதோ அங்கெல்லாம் தடவிவந்தால் வெறும் 3-4 நாட்களில் படர்தாமரை மறைந்துவிடும்.
ஆனால், மீண்டும் படர்தாமரை வரக்கூடாது என்றால் உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்” என்று டாக்டர் ராஜலெட்சுமி கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.