/indian-express-tamil/media/media_files/2025/06/06/L2CBg9qoeEvqkmMsIM0F.jpg)
டாக்டர் ராஜலட்சுமி, சமையல் சோடாவுடன் இதை சேர்த்து தேய்த்தால், மஞ்சள் கறை பற்கள் வெள்ளையாக மாறும் என்று டிரெடிஷனல் கேர் ஹாஸ்பிடல் டாக்டர் டி ராஜலட்சுமி என்ற (Traditional Care Hospital Dr. D. Rajalakshmi) என்ற யூடியூப் சேனலில் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
பற்களின் ஆரோக்கியமே உடலின் ஆரோக்கியம். அதனால், உங்கள் பற்களை வெள்ளையாக வைத்துக்கொள்ள சமையல் சோடாவுடன் இதை சேர்த்து தேய்த்தால், மஞ்சள் கறை பற்கள் வெள்ளையாக மாறும் என்று டாக்டர் ராஜலட்சுமி ஆலோசனை வழங்குகிறார்.
சிலரின் பற்கள் மஞ்சள் கறை படிந்து இருக்கும், காறை படிந்து உடையும், இவற்றை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், பல் மருத்துவர்களிடம் சென்று பிளீச்சிங் செய்து சுத்தம் செய்வார்கள். இல்லையென்றால், பற்களை வெண்மையாக்கும் கருவிகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால், இவற்றில் எல்லாம் பக்கவிளைவு இருப்பதாகக் கூறும் டாக்டர் ராஜலட்சுமி, சமையல் சோடாவுடன் இதை சேர்த்து தேய்த்தால், மஞ்சள் கறை பற்கள் வெள்ளையாக மாறும் என்று டிரெடிஷனல் கேர் ஹாஸ்பிடல் டாக்டர் டி ராஜலட்சுமி என்ற (Traditional Care Hospital Dr. D. Rajalakshmi) என்ற யூடியூப் சேனலில் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
மஞ்சள் கறை படிந்த பற்கள், காறை படிந்த பற்கள் வெள்ளையாக மாற தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் தினமும் இரவு வாய் கொப்பளிக்க வேண்டும். அதாவது தேங்காய் எண்ணெயில் 20 நிமிடம் வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளித்தபின், பல்கூச்சம் இருந்தால் தரமான தேங்காய் எண்ணெய் இல்லை என்று பொருள். அதனால், சுத்தமான கலப்படமில்லாத நல்ல தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள்.
தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் வாய்க் கொப்பளித்து துப்பிய பிறகு, 1 டீஸ்பூன் சமையல் சோடா எடுத்துக்கொள்ளுங்கள். அதில், ஹைட்ரஜன் பெராக்சைடு 3% அல்லது அதற்கு கீழே இருக்க வேண்டும். அதில் 8 சொட்டு தண்ணீர் விட வேண்டும். அதில் 3 சொட்டு லவங்க தைலம் விட வேண்டும். விரலில் நன்றாகக் குழைத்துக்கொள்ளுங்கள். அதை எடுத்து பிரஷ் மூலம் பல் துலக்குங்கள். அதாவது 1 அல்லது 2 நிமிடங்களில் தேய்த்து முடித்துவிட வேண்டும். அதற்கு மேல் தேய்க்கக்கூடாது. அதற்கு பிறகு, வெதுவெதுப்பான வெந்நீரில் வாய் கொப்பளித்து கழுவ வேண்டும். மறுநாள் காலையில், வழக்கமான டூத் பேஸ்ட் மம் பல் தேயுங்கள். இது போல, வாரத்திற்கு 3 நாட்கள் அல்லது 2 நாட்கள் செய்து வந்தால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறை நீங்கும், பற்களின் கீழே படிந்திருக்கும் காறை படிப்படியாக போய்விடும். பற்கள் வெள்ளையாக இருக்கும் என்று டாக்டர் ராஜலட்சுமி கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.