/indian-express-tamil/media/media_files/2025/06/18/Dr Rajalakshmi vitiligo-46c63681.jpg)
வெண்புள்ளியைக் குறித்தும் இதை குணமாக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஏ.எஸ்.எம் இன்ஃபோ (ASM INFO) என்ற யூடியூப் சேனலில் டாக்டர் ராஜலட்சுமி ஆலோசனைகளை வழங்கியுள்ளார். (Image Source: Freepik)
வெண்புள்ளி ஏற்பட்டால் அது ஏதோ பெரிய நோய் என்பது போல சிலர் பயப்படுகின்றனர். அப்படி பயப்படவேண்டாம், அது ஒரு குறைபாடுதானே தவிர, நோய் அல்ல என்று கூறும் டாக்டர் ராஜலட்சுமி, வெண்புள்ளியை குணமாக்க இந்த அரிசியை வறுத்து இந்த எண்ணெய் சேர்த்து தடவ வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.
உடலில் ஏற்படும் வெண்புள்ளியால் சிலர் பெரும் வருத்தமும் மன அழுத்தமும் வேதனையும் அடைகின்றனர். வெண்புள்ளி ஏற்பட்டால் அது ஏதோ பெரிய நோய் என்பது போல சிலர் பயப்படுகின்றனர். ஆனால், இந்த வெண்புள்ளியைக் குறித்தும் இதை குணமாக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஏ.எஸ்.எம் இன்ஃபோ (ASM INFO) என்ற யூடியூப் சேனலில் டாக்டர் ராஜலட்சுமி ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
உடலில் ஏற்படும் வெண்புள்ளிகள் தோலில் மெலனின் குறைபாடு காரணமாக ஏற்படுகின்றன. சிலருக்கு ஜீன் காரணமாகவும் இந்த மெலனின் குறைபாடு ஏற்படுகின்றன. செல்கள் பாதிப்படைவதாலும் இந்த வெண்புள்ளி ஏற்படுகிறது என்று டாக்டர் ராஜலட்சுமி கூறுகிறார். மேலும், வெயிலில் செல்வதன் மூலமும் இந்த வெண்புள்ளி சரியாகும் என்று கூறுகிறார்.
வெண்புள்ளி உள்ளவர்கள் இது ஏதோ பெரிய நோய் என்பது போல சிலர் பயப்படுகின்றனர். அப்படி பயப்படவேண்டாம், அது ஒரு குறைபாடுதானே தவிர, நோய் அல்ல என்று கூறும் டாக்டர் ராஜலட்சுமி, விட்டமின் டி சத்துக் குறைபாட்டால் வரும் என்று கூறுகிறார். இதற்கு வெயிலில் செல்ல வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.
வெண்புள்ளிகள் குணமாக மருத்துவர்களின் ஆலோசனைப் பேரில் இணை உணவுகள், மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம். வெண்புள்ளி உள்ளவர்கள் கருங்கோழி சாப்பிடலாம். சித்த மருத்துவர்களின் ஆலோசனைப் பேரில், கருங்கோழி சூரணம் சாப்பிடலாம். அதே போல, கோதுமை புல் ஜூஸ் குடிக்கலாம். இதனால், வெண்புள்ளிகள் குணமாகும்.
அதே போல, வெண்புள்ளிகள் மறைய கார்போ அரிசியை வாங்கி லேசாக வறுத்து அரைத்து அதை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் குழைத்து வெண்புள்ளிகள் மீது தடவி வந்தால், நாளடைவில் நிறமி ஏற்பட்டு வெண்புள்ளி மறையும் என்று டாக்டர் ராஜலட்சுமி பரிந்துரைக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.