உலகம் முழுவதும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோயாளிகள் பலரும் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டுள்ளனர். அவர்கள் சுகரைக் குறைக்க காலையில் 20 நிமிஷம், மாலையில் 20 நிமிஷம் நடக்க வேண்டும். இல்லையென்றால், சுகரைக் குறைக்க வேறு வழியே இல்லை என்று டாக்டர் ஷர்மிகா கூறுகிறார்.
டாக்டர் ஷர்மிகா டெய்ஸி ஹாஸ்பிட்டல் யூடியூப் சேனலில், சர்க்கரையைக் குறைக்க ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சர்க்கரை நோயை வாழ்க்கை முறையில் மாற்றம், உணவுமுறாஇயில் மாற்றம் செய்வதன் மூலம் சர்க்கரையைக் கட்டுப்படுத்தி குறைக்க முடியும் என்கிறார் டாக்டர் ஷர்மிகா.
சர்க்கரை நோயாளிகள், உணவில் மாவுச் சத்து உணவுகள், இனிப்பு முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் ஷர்மிகா கூறுகிறார்.
அதே போல, காலை உணவை காலை 6.30 மணிக்கு இரவு உணவை 7 மணிக்குள்ளும் சாப்பிட்டுவிடுங்கள். இரவு 7 மணிக்கு மேல் எதையுமே சாப்பிடாதீர்கள் என்கிறார் டாக்டர் ஷர்மிகா.
அதே போல, சர்க்கரை நோயாளிகள் சுகரைக் குறைக்க வேண்டும் என்றால், காலையில் ஒரு 20 நிமிஷம் மாலையில் ஒரு 20 நிமிஷம் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்கிறார். மெதுவாக நடங்கள், ஒவ்வொரு மாதமும் இப்படி நடக்கும் நேரத்தை அதிகரித்துக்க்கொண்டே இருங்கள். அப்போதுதான், உணவுமுறையுடன், இப்படி நடப்பது மூலம் சுகரைக் குறைக்க முடியும். இல்லையென்றால், சுகரைக் குறைக்க வேற வழியே இல்லை என்று டாக்டர் ஷர்மிகா கூறுகிறார்.