மூட்டு வலியை சரி செய்ய மருந்து, மாத்திரை மட்டும் போதாது; இந்த 5 விஷயம் முக்கியம்; டாக்டர் ஷர்மிகா
மூட்டுவலிக்கு நிவாரணம் என்ன தேடிக்கொண்டிருப்பவரா நீங்கள், மூட்டு வலியை சரி செய்ய மருந்து, மாத்திரை மட்டும் போதாது; இந்த 5 விஷயம் முக்கியம் என்று டாக்டர் ஷர்மிகா பரிந்துரைக்கிறார்.
மூட்டுவலிக்கு நிவாரணம் என்ன தேடிக்கொண்டிருப்பவரா நீங்கள், மூட்டு வலியை சரி செய்ய மருந்து, மாத்திரை மட்டும் போதாது; இந்த 5 விஷயம் முக்கியம் என்று டாக்டர் ஷர்மிகா பரிந்துரைக்கிறார்.
டாக்டர் ஷர்மிகா பயனுள்ள பல ஆரோக்கிய ஆலோசனைகளை டெய்ஸி ஹாஸ்பிட்டல் (@daisyhospital_chennai) என்ற யூடியூப் சேனலில் வழங்கி வருகிறார். Photograph: (YouTube/ @daisyhospital_chennai)
வயது மூப்பு, அதிக உடல் எடை உள்ளிட்ட சில காரணங்களால் பலரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். மூட்டுவலிக்கு நிவாரணம் என்ன தேடிக்கொண்டிருப்பவரா நீங்கள், மூட்டு வலியை சரி செய்ய மருந்து, மாத்திரை மட்டும் போதாது; இந்த 5 விஷயம் முக்கியம் என்று டாக்டர் ஷர்மிகா பரிந்துரைக்கிறார்.
Advertisment
டாக்டர் ஷர்மிகா பயனுள்ள பல ஆரோக்கிய ஆலோசனைகளை டெய்ஸி ஹாஸ்பிட்டல் (@daisyhospital_chennai) என்ற யூடியூப் சேனலில் வழங்கி வருகிறார். அந்த வகையில் மூட்டுவலியைப் போக்க இந்த ஆலோசனைகளை வழங்கி உள்ளார். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
டாக்டர் ஷர்மிகா கூறுகையில், “மூட்டுவலியை சரி செய்ய முடியுமா என்று கேட்பவர்களுக்கு இந்த 5 விஷயத்தை செய்துவிட்டால் சரி செய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இதை செய்தாலும் வெறுமனே வலி நிவாரணி மாத்திரைகள் மட்டும் எடுத்துக்கொண்டிருந்தால், கடைசி வரை அதனோடவே கடைசி வரை வாழ வேண்டியிருக்கும்.
மூட்டு வலியை சரி செய்ய செய்ய வேண்டிய 5 விஷயங்கள் என்ன என்று பார்ப்போம் வாருங்கள்.
Advertisment
Advertisements
முதலில் உடல் எடை குறைப்பது, பி.எம்-ஐ-யை விட நீங்கள் அதிக எடை வைத்திருந்தால், உங்களுடைய எலும்புகள் கொஞ்சநாள்தான் தூக்குமே தவிர, அதற்கு பிறகு எலும்புகள் வீக் ஆகிவிடும். எடை குறைப்பு செய்து கட்டாயம் உங்களுடைய உயரத்துக்கு ஏற்ற எடைக்கு கொண்டுவந்துவிடுங்கள்.
கால் வலிக்கிறது, கை வலிக்கிறது என்று நடைபயிற்சி செய்யாமல் உக்கார்ந்துகொண்டே இருந்தால், எலும்புகளுக்கு உறுதித் தன்மை இல்லாமல், ரத்த ஓட்டம் இல்லாமல் மருந்து மாத்திரையிலேயே வாழ வேண்டியதாகிவிடும். அதனால், நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
நல்ல உணவு தேவை, கால்சியம் நிறைந்த உணவுகள், வைட்டமின் டி நிறைந்த உணவுகள், நல்லெண்ணெய், கீரை, முட்டை, பன்னீர், நட்ஸ், மீன் உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த மாதிரியான உணவுகளை சாப்பிடாமல் மூட்டுவலி சரியாகாது.
வைட்டமின் டி பெறுவதற்கு காலையில், மாலையில் லேசான வெயிலில் நடைபயிற்சி செல்லுங்கள்.
கடைசியாக நீங்கள் இதையெல்லாம் செய்தாலும்கூட, நல்லா தூங்கினால்தான், மூட்டுவலி மமுவதுமாக சரியாகும். அதனால், நல்ல தூக்கம் தேவை.