வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் அரைத்து தடவுங்க… பொடுகு தொல்லை நீங்கும்; டாக்டர் ஷர்மிகா
பொடுகுத் தொல்லையால் சிரமப்படுகிறீர்களா கவலையை விடுங்கள், வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் தடவுங்கள் பொடுகுத் தொல்லை நீங்கும் என்று டாக்டர் ஷர்மிகா ஆலோசனை கூறுகிறார்.
பொடுகுத் தொல்லையால் சிரமப்படுகிறீர்களா கவலையை விடுங்கள், வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் தடவுங்கள் பொடுகுத் தொல்லை நீங்கும் என்று டாக்டர் ஷர்மிகா ஆலோசனை கூறுகிறார்.
டாக்டர் ஷர்மிகா பொடுகுத் தொல்லை போக டெய்ஸி ஹாஸ்பிட்டல் சென்னை (@daisyhospital_chennai) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான ஆலோசனையை வழங்கியுள்ளார்.
பொடுகுத் தொல்லையால் சிரமப்படுகிறீர்களா கவலையை விடுங்கள், வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் தடவுங்கள் பொடுகுத் தொல்லை நீங்கும் என்று டாக்டர் ஷர்மிகா ஆலோசனை கூறுகிறார்.
Advertisment
டாக்டர் ஷர்மிகா பொடுகுத் தொல்லை போக டெய்ஸி ஹாஸ்பிட்டல் சென்னை (@daisyhospital_chennai) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான ஆலோசனையை வழங்கியுள்ளார். வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் தடவினால் பொடுகுத் தொல்லை நீங்கும் என்று டாக்டர் ஷர்மிகா கூறுகிறார். அதை எப்படி செய்ய வேண்டும் என்று இங்கே பார்ப்போம்.
பொடுகுத் தொல்லையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், அதைப் பற்றி உடனடியாக கவனம் செலுத்துங்கள். அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டு பிறகு, டெர்மடைஸ் அளவுக்கு போற வரைக்கும் விட்டுவிடாதீர்கள் என்று டாக்டர் ஷர்மிகா எச்சரிக்கிறார்.
Advertisment
Advertisements
இந்த பொடுகு ஆங்கிலத்தில் டாண்ட்ரஃப் என்று சொல்கிறார்கள். பொடுகு உடலில் உள்ள வறட்சியினால் வருகிறது. ஃபக்கஸ் வந்து நம் தலையில் இருக்கிற எண்ணெய்யையும் டெட் செல்சையும் சாப்பிட்டு வளர்வதுதான் டாண்ட்ரஃப். இதை நாம் சரி செய்ய வேண்டுமென்றால் நம் உடலில் இருந்து வறட்சியைப் போக்க வேண்டும். அதற்கு நாம் கொஞ்சம் நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். வால்நட், மீன், முட்டை சாப்பிட வேண்டும். இந்த மூன்றிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நல்ல எண்ணெய் நிறைய இருக்கிறது. நிறைய தண்ணீர் குடியுங்கள். தலைக்கு தாராளமாக எண்ணெய் வைக்கலாம். இரவு முழுவதும் எண்ணெய் தேய்த்து ஊற வைக்காதீர்கள்.
குளிப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு தலைக்கு எண்ணெய் தேய்த்து ஊற வைத்து, நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். அடுத்து, வெந்தயத்தை இரவில் ஊற வைத்துவிட்டு, காலையில் அதை நன்றாக அரைத்து தலைமுடிக்கு அதை பேக்காகப் போட்டு தடவுங்கள்.
அதே போல, முட்டையின் வெள்ளைகருவை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் தயிர் போட்டு நன்றாகக் கலக்கி உங்கள் தலையில் தடவுங்கள். சில்லுனு இருக்கும். 20-30 நிமிடம் ஊற வைத்துவிட்டு நன்றாகக் கழுவிவிடுங்கள்.