/indian-express-tamil/media/media_files/2025/08/08/dr-sharmika-soft-and-shining-hair-2025-08-08-14-45-27.jpg)
வீட்டிலேயே ஹேர் கண்டிஷர் செய்வதற்கு தேவையான பொருள் என்ன, எப்படி செய்வது என்று விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள். Photograph: (Daisy Hospital/ Freepik)
வீட்டில் இருக்கும் இந்த பொருள் வைத்து ஹேர் கண்டிஷனர் தயார் செய்து பயன்படுத்தி பாருங்கள், உங்கள் தலைமுடி முடி சாஃப்ட்டா சைனிங்கா வரும் என்று டாக்டர் ஷர்மிகா பரிந்துரைக்கிறார். வீட்டிலேயே ஹேர் கண்டிஷர் செய்வதற்கு தேவையான பொருள் என்ன, எப்படி செய்வது என்று விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள்.
டாக்டர் ஷர்மிகா இயற்கை மருத்துவ ஆலோசனைகளை டெய்ஸி ஹாஸ்பிட்டல் (Daisy Hospital) என்ற யூடியூப் சேனலில் கூறி வருகிறார். அந்த வகையில், வீட்டில் இருக்கும் இந்தப் பொருளை வைத்து ஹேர் கண்டிஷனர் செய்து பயன்படுத்தினால், தலைமுடி சாஃப்ட்டா சைனிங்கா வரும் என்று கூறியுள்ளார்.
டாக்டர் ஷர்மிகா தான் பயன்படுத்திய ஒரு ஹேர் கண்டிஷனர் பற்றி கூறுகையில், “இந்த ஹேர் கண்டிஷனர் உங்களுக்கு ஒத்துக்கொண்டால் நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.
வெந்தயம் எடுத்துக்கொள்ளுங்கள். வெந்தயத்தில், ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து இருக்கிறது. வெந்தயம் பொடுகு தொல்லையில் இருந்து வெளிவர உதவும். இது நம்ம தலைமுடியை சாஃப்ட்டாகவும் சைனிங்காகவும் வைத்துக்கொள்ள உதவும்.
உங்கள் மூடியின் நீளம் எவ்வளவோ அதைப் பொறுத்து, வெந்தயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி இரவே ஊற வைத்துவிடுங்கள். காலையில் எடுத்து பார்த்தால், வெந்தயம் நன்றாக ஊறி உப்பி வந்திருக்கும். அதை எடுத்து மிக்ஸியில் போட்டு, அதனுடன் செக்கில் ஆடிய தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அந்த வெந்தயப் பேஸ்ட்டை எடுத்து தலைமுடி முழுவதும் தடவி நன்றாகத் தேய்த்துவிடுங்கள். கீழே இருந்து மேல் வரை, அடி முடிவரை நன்றாகத் தடவிவிடுங்கள். பிறகு, 20 நிமிடம் கழித்து குளித்துவிடுங்கள். குளிக்கும்போது, இயற்கையான ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு குளிக்கலாம்.” என்று டாக்டர் ஷர்மிகா கூறுகிறார்.
முக்கியமாக, இந்த வெந்தயப் பேஸ்ட்டை யார் பயன்படுத்தக்கூடாது என்றால், சைனஸ், வீசிங், ஆஸ்துமா, இருமல், ஜலதோஷம், மூச்சுத்திணறல், அடிக்கடி ஜலதோஷம் உள்ளவர்கள் இந்த வெந்தயப் பேஸ்ட்டை பயன்படுத்தவே கூடாது என்று டாக்டர் ஷர்மிகா எச்சரிக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.