/indian-express-tamil/media/media_files/VWniFluOCffapIQyvi4H.jpg)
சித்த மருத்துவர் சிவராமன் உடல் எடை குறைப்பு பற்றி கூறியுள்ளார். படிப்படியாக, நம் வாழ்க்கை முறை, உணவு பழக்கத்தை புரிந்து கொண்டு உடல் எடையை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவர் பேசிய யூடியூப் வீடியோவில், "நம்மில் பலர் நினைக்கின்ற மாதிரி உடனடியாக, தடாலடியாக உடல் எடையை குறைக்க முடியாது. யாராவது இந்த மாத்திரை சாப்பிட்டால் 2 மாதங்களில் எடை குறையும் என்று கூறினால் அது பொய், நம்பாதீர்கள். நல்ல உடற்பயிற்சி, உணவு பழக்கம், கட்டுப்பாடு உள்ளவர்கள் தான் உடல் எடையை குறைக்க முடியும். படிப்படியாக, நம் வாழ்க்கை முறையை உணவு பழக்கத்தை புரிந்து கொண்டு உடல் எடையை குறைக்க வேண்டும்.
ஓட்ஸ் நல்லது தான். ஆனால் அது மட்டும் எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையாது. அதை விட சிறந்த உணவு சிறுதானியத்தில் உள்ளது. சாதாரணமாக 2400-2500 கெலோரிஸ் தேவைப்படும் இடத்தில் நம் உணவு பழக்கத்தில் மாற்ற கொண்டு வந்து தொப்பையில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும். காலையில் காபி, டீக்கு பதில் சுடுநீரில் தேன் கலந்து குடிக்கலாம். காலை உணவாக சிறுதானிய பொங்கல், வேக வைத்த அவல், திணை அரிசி, சிறுதானிய இட்லி போன்றவவை சாப்பிடலாம். பழங்களும் சாப்பிட வேண்டும்.
பப்பாளி துண்டு, சிவப்பு கொய்யா போன்ற பழங்களை சாப்பிடலாம். 11 மணியளவில் பச்சை தேநீர் இனிப்பு இல்லாமல் குடிக்கலாம். மதிய உணவுக்கு முன்னாடி வறுத்த பொடி செய்த வெந்தயம் சாப்பிடலாம். வெந்தயத்தில் உள்ள நார் பொருட்கள் தீவிர பசியை குறைக்கும். அதோடு அது ரத்த கொழுப்பையும் கரைக்கும். அதன்பின் காய்கறிகள் முதலில் சாப்பிட வேண்டும். சாப்பாடு குறைவாக சாப்பிட வேண்டும். குழம்பில் அதிகம் எண்ணெய் இல்லாமலும் இருக்க வேண்டும் என்றார்.
அதிக கொழுப்பு இல்லாத காய்கறிகளில் குழம்பு வைத்து சாப்பிடலாம். நிறைய ரசம், மோர் எடுத்துக் கொள்ளலாம்" என மருத்துவர் சிவராமன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.