உணவே மருந்து என்ற அடிப்படையில் சாப்பாட்டை மருந்தாக கருதியவர்கள் தமிழர்கள். ஆனால், இன்று பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இவை அனைத்திற்கும் நமது உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் தான் காரணம் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களில் அதிகமாக இரசாயனம் கலந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து ஓட்ஸ், கலிஃபோர்னியாவில் இருந்து திராட்சை, ஆஸ்திராவில் இருந்து ஆரஞ்சு பழம் ஆகியவை நல்லது என இறக்குமதி செய்யப்படுகிறது எனக் கூறியுள்ள அவர், இவை கெட்டுப் போகாமல் இருப்பதற்கு பல இரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அவற்றையும் சேர்த்து தான் நாம் சாப்பிடுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, உலகிலேயே தினை அரிசியில் தான் அதிகப்படியான பீட்டா கரோட்டின் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், பெரும்பாலான மக்கள் இதனை சாப்பிடுவது இல்லை என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இவை கண் பார்வைக்கு நல்லது எனவும் சிவராமன் விவரித்துள்ளார். இதேபோல், முருங்கை கீரை, பப்பாளி போன்றவையும் கண் பார்வைக்கு நல்லது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“