இயற்கை உணவு முறையையும் சித்த மருத்துவத்தையும் ஊர் ஊராக மேடைகளில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் மருத்துவர் கு. சிவராமன். சமூக ஊடகங்களின் காலத்தில் மருத்துவர் சிவராமனுடைய மருத்துவக் குறிப்புகள், இயற்கை உணவு முறையும் சமூக ஊடகங்களின் வழியாக பெரிய அளவி சென்று சேர்ந்திருக்கிறது.
தற்காலத்தில் உடல் எடையைக் குறைப்பதுதான் பலருடைய இலக்காக இருக்கிறது. ஆனால், பலரும் உடல் எடையை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். உடல் எடையைக் குறைக்க மருத்துவர் சிவராமன் ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கியுள்ளார்.
மருத்துவர் சிவராமன் கூறுகிறார், “உடல் எடையை குறைக்க வேண்டுமானால், பால் தவிர்க்க வேண்டும். பால் மட்டுமல்ல, பால் பொருட்களான தயிர், நெய், சீஸ் போன்ற எதையும் எடுத்துக்கொள்ளாதீர்கள். அதே போல, முதலில் எந்த இனிப்பையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, பிறகு, பனைவெல்லம், தேன், கருப்பட்டி போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். அதே போல, உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், முதலில் வெள்ளைச் சர்க்கரையைச் சேர்க்கக் கூடாது. அதே போல, நேரடியாகச் சர்க்கரையைக் கொடுக்கக்கூடிய கிழங்குகளைத் தவிர்க்க வேண்டும். அதே போல, பட்டைத் தீட்டப்பட்ட தானியங்களை பச்சரிசி, மைதா போன்ற வெள்ளையானப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். அதே போல, வேகவேகமாக உடல் எடையைக் கூட்டக்கூடிய பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். அதே போல, ஐஸ் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். நடு ராத்திரியில் எழுந்து யார் யார் ஐஸ் தண்ணீர் குடிக்கிறார்களோ, அவர்களுடைய உடல் எடை கூடிக்கொண்டேதான் இருக்கும். உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், குளிர்ச்சியானப் பொருட்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்கள் உணவு விஷயத்தில் தெளிவு இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“