இந்த உணவுகளை மட்டும் விட்டுடுங்க; 20 வருடம் ஆயுள் கூடும்: மருத்துவர் சிவராமன்
குப்பை உணவுகளைக் கைவிட்டு, உங்கள் வீட்டில் கிச்சனில் தினமும் 20 கூடுதலகா செலவிட்டு ஆரோக்கியமான உணவுகளை தயார் செய்யுங்கள், உங்கள் ஆயுள்காலத்தில் 20 வருடங்கள் கூடும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அந்த குப்பை உணவுகள் என்ன என்று பார்ப்போம்.

குப்பை உணவுகளாக விற்கக்கூடிய பீசா, பர்கர், சவர்மா இந்த மாதிரி விஷயங்களுக்குள் நம் சமூகம் வேக வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. அவற்றிலிருந்து வெளியே வந்து நம்முடைய ஆரோக்கிய உணவுக்குள் நாம் நிற்க வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். Image Source: Freepik/ Facebook/ Grussamy Sivaraman
குப்பை உணவுகளைக் கைவிட்டு, உங்கள் வீட்டில் கிச்சனில் தினமும் 20 கூடுதலகா செலவிட்டு ஆரோக்கியமான உணவுகளை தயார் செய்யுங்கள், உங்கள் ஆயுள்காலத்தில் 20 வருடங்கள் கூடும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அந்த குப்பை உணவுகள் என்ன என்று பார்ப்போம்.
Advertisment
இயற்கை மருத்துவம், இயற்கை உணவு முறைகள், பாரம்பரிய சித்த மருத்துவத்தின் மகத்துவம், நமது பாரம்பரிய உணவுகளின் மருத்துவ குணங்கள் குறித்தும் மருத்துவர் சிவராமன் தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் மேடைதோறும் பேசி பரப்பி வருகிறார்.
குப்பை உணவுகளாக விற்கக்கூடிய பீசா, பர்கர், சவர்மா இந்த மாதிரி விஷயங்களுக்குள் நம் சமூகம் வேக வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. அவற்றிலிருந்து வெளியே வந்து நம்முடைய ஆரோக்கிய உணவுக்குள் நாம் நிற்க வேண்டும் என்பதை ஒரு மிகப்பெரிய கடமை என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
ஹெல்த் தமிழ்நாடு யூடியூப் சேனலில் மருத்துவர் சிவராமன் கூறுகிறார்: “திண்பண்டங்கள் என்று எடுத்துக்கொண்டால், சுண்டல் பிரதானமாக இருக்கட்டும். நம் வீட்டில் செய்யக்கூடிய பஜ்ஜியோ, வடையோ அவற்றில் நாம் யாரும் சோடியம் பென்சோஹைட் போட மாட்டோம். அதில் யாரும் பொட்டாசியம் நைட்ரேட் போட மாட்டோம். அதில் மோனோ சோடியம் புளுடமின் போட்டு உங்கள் வீட்டில் யாரும் சாப்பிட தரமாட்டீர்கள். ஆனால், கடையில் விற்பனை செய்யக்கூடிய, பாக்கெட்டுகளை விற்பனை செய்யக்கூடிய, அனைத்து திண்பண்டங்களிலும், அத்தனை நொறுக்குத் தீணிகளிலும் இந்த தேவையற்ற ரசாயனங்கள் கலந்திருக்கும். இந்த ரசாயனங்கள் இல்லாத ஆரோக்கியமான உணவை நாம் தினமும் சாப்பிட வேண்டும். நம்முடைய குழந்தைகளுக்கும் கொடுத்து வர வேண்டும்.
Advertisment
Advertisements
குப்பை உணவுகளாக விற்கக்கூடிய பீசா, பர்கர், சவர்மா இந்த மாதிரி விஷயங்களுக்குள் நம் சமூகம் வேக வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. அவற்றிலிருந்து வெளியே வந்து நம்முடைய ஆரோக்கிய உணவுக்குள் நாம் நிற்க வேண்டும் என்பதை ஒரு மிகப்பெரிய கடமையாக செய்ய வேண்டும். திரும்பவும் சொல்கிறேன், இது ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்வது அல்ல, கட்டாயம், இனிமேல் இதை தடுக்க முடியாது என்று அப்படியான உணவுகளை எடுத்தால் மட்டும்தான் நாளை எதிர்காலத்தை, வருங்காலத்தை ஒரு ஆரோக்கியமான சமூகமாக மாற்ற முடியும்.
பெருவாரியாக புற்றுநோயும் சர்க்கரை நோயும் கூடிக்கொண்டிருக்கிற காலத்தில் தினம் தினம் நம் அடுப்பங்கரையில் கூடுதலாக, 20 நிமிடங்கள் மெனக்கெட்டு கரிசனத்தோடு உங்கள் உணவைத் தயாரியுங்கள். உனஙகள் ஆயுள் காலத்தில் 20 வருடங்களைக் கூடுதலாகப் பெறுவீர்கள்” என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.