சமூக ஊடகங்களின் இயற்கை உணவுமுறை, சித்த மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு பரவலானதில் மருத்துவர் கு. சிவராமனுக்கு முக்கிய பங்கு உண்டு. சித்த மருத்துவம், இயற்கை உணவுகளைப் பற்றி நவீன அறிவியல் மொழியில் வாதிட்டு மக்களை ஈர்த்தவர்.
அந்த வகையில், மருத்துவர் கு. சிவராமன், மனதுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய 2 பழங்களைப் பற்றி கூறியுள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் கு. சிவராமன் அது என்ன பழங்கள் என்று கூரியுள்ளார். “மனதுக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய பழங்கள் இரண்டே இரண்டுதான். மூளையில் சிரட்டோனின் என்று ஒரு விஷயம் இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் அந்த சிரட்டோனின் இருந்தால்தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். சிரட்டோனின் குறைந்தால் மன அழுத்தம் ஆகிவிடும். சிரட்டோனின் குறைந்தால், எவ்வளவு சுற்றி சுற்றி ஆடினாலும் பாடினாலும் அவர்களுக்கு மகிழ்ச்சி வரவே வராது. ஆக்டிவாகக இருக்க வேண்டும் என்றால், டொப்பமைன் நிறைய இருக்க வேண்டும். அப்படி, மகிழ்ச்சியாக இருக்க உதவும் சிரட்டோனின் நல்லா இருப்பதற்கான முக்கியமான பழம் எது என்றால், வாழைப்பழமும் மாதுளை பழமும்தான்.” என்று தெரிவித்துள்ளார்.
அதனால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா, அப்படியென்றால் சிரட்டோனின் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு, தினமும் வாழைப்பழம் மாதுளை பழம் என இரண்டையும் சாப்பிடுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“