2050 ஆம் ஆண்டுக்கு பிறகு கடலில் வெறும் பிளாஸ்டிக் கழிவுகளே இருக்கும் என மனம் நொந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மனம் வருத்தத்துடன் பேசினார் . எனவே பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துவேன் கூடாது என அறிவுறுத்தனர்.
ஜீரோ வேஸ்ட் திருவிழா 2023 பிளாஸ்டிக் கழிவு ஒழிப்பு நிகழ்ச்சி சின்ன கோட்டக்குப்பம், கிழக்கு கடற்கரைச் சலையில் உள்ள “தி ஆர்போரெட்டம்“ மையத்தில் இன்று நடைபெற்றது.
/indian-express-tamil/media/post_attachments/56bb3351-9a3.jpg)
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளைப் பார்வையிட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியதாவது, "நெகிழிக் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துவதில் நாம் கட்டுப்பாட்டோடு இல்லாவிட்டால் 2050 ஆம் ஆண்டிற்குள் மீன்களை விட கடலில் நெகிழிக் பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம் இருக்கும் என்று கூறுகிறார்கள். மனிதருக்கு உடல்நிலை சரியில்லாத பொழுது உடல் வலி வந்து ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதைப் போலத்தான் புவி வெப்பமயமாதலின் போது பூமிக்கும் இருக்கும்.
/indian-express-tamil/media/post_attachments/8f0f2723-1ea.jpg)
கழிவுகளை சரியாக கையாளாமல் விடுவதாலும், சுகாதாரத்தை கடைபிடிக்காமல் இருப்பதாலும், நெகிழித்தாள்களை சரியாக கையாளாமல் இருப்பதாலும் புவி வெப்பமயமாதல் ஏற்பட்டு மிகப்பெரும் அபாயங்களை ஏற்படுத்தும்.
சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தடுக்க நாம் மாற்றங்களை நம்மிடம் இருந்து கொண்டு வர வேண்டும். நம் வீடுகளில் இருந்தும் நம் வேலை செய்யும் அலுவலகங்களில் இருந்தும் தொடங்க வேண்டும். அறையை பயன்படுத்திவிட்டு வெளியே செல்லும் பொழுது மின்விளக்குகளை அணைக்க வேண்டும். குளிர்சாதன கருவிகளை சரியாக பயன்படுத்த வேண்டும்.
/indian-express-tamil/media/post_attachments/884585ad-6da.jpg)
ஐந்து வேப்ப மரங்கள் இருந்தால் அது ஒரு குளிர்சாதன எந்திரத்திற்கு சமம் என்று கூறுவார்கள். அவை மிக சுத்தமான காற்றினை வெளியிடுகின்றன. இயற்கை நமக்கு பல நன்மைகளை தருகிறது. ஆனால், நாம் பசுமையை கொண்டாடுவதில்லை.
/indian-express-tamil/media/post_attachments/592b020c-15f.jpg)
நமது நடவடிக்கைகளை இயற்கையோடு பொருந்தி சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக செடிகளை நடுவோம். கழிவுகளை சரியாக அப்புறப்படுத்துவோம். நெகிழிகளை மீள்உருவாக்கம் செய்து பயன்படுத்தவோம். இயற்கையோடு சார்ந்த வாழ்வியலை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். கைகளை சுத்தம் செய்யும் பொழுது தேவையான அளவு குறைந்த நீரை பயன்படுத்த வேண்டும். மின்சாரத்தை மிக குறைவாக தேவையான அளவு பயன்படுத்த வேண்டும். நம்மிடமிருந்து மாற்றம் உருவாகும்போது மாற்றங்கள் பெரிதாக இருக்கும்". இவ்வாறு அவர் பேசினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“