விரைவாக கர்ப்பம் தரிக்க… இதை எல்லாம் ஃபாலோ பண்ணணும்; டாக்டர் வித்யலக்‌ஷ்மி

கருவில் குழந்தை உருவாகுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் வழிகள், மாதவிடாய் சுழற்சி மற்றும் கருமுட்டை வெளியேறும் நாட்களைக் கண்டறிவது போன்ற முக்கிய தகவல்களை டாக்டர் வித்யாலட்சுமி பகிர்ந்துள்ளார்.

கருவில் குழந்தை உருவாகுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் வழிகள், மாதவிடாய் சுழற்சி மற்றும் கருமுட்டை வெளியேறும் நாட்களைக் கண்டறிவது போன்ற முக்கிய தகவல்களை டாக்டர் வித்யாலட்சுமி பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
How to pregnant fast _

கருவில் குழந்தை உருவாகுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் வழிகள், மாதவிடாய் சுழற்சி மற்றும் கருமுட்டை வெளியேறும் நாட்களைக் கண்டறிவது போன்ற முக்கிய தகவல்களை டாக்டர் வித்யாலட்சுமி தனது யூடியூப் சேனலில் விரிவாக விளக்கி வீடியோ வெளியிட்டு உள்ளார்.

மாதவிடாய் சுழற்சி (Menstrual Cycle):

Advertisment

சராசரியாக 28 நாட்கள் கொண்ட மாதவிடாய் சுழற்சியில், கருமுட்டை வெளியாகும் நாட்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 5 நாட்கள்தான் கருத்தரிக்க மிகவும் ஏற்ற நாட்கள் என்கிறார் டாக்டர் வித்யாலட்சுமி. இந்த நாட்களில் கருத்தரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. விந்து அணுக்கள் பெண்ணின் இனப்பெருக்கப் பாதையில் 3 முதல் 5 நாட்கள் வரை உயிருடன் இருக்கும் என்றும், ஆனால் கருமுட்டை வெளியேறிய பிறகு 24 முதல் 36 மணி நேரம் மட்டுமே உயிர் வாழும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, கருமுட்டை வெளியேறுவதற்கு முந்தைய நாட்களில் உறவு கொள்வது நல்லது என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கருமுட்டை வெளியேறும் நாட்களைக் கண்டறியும் வழிகள்:

டாக்டர் வித்யாலட்சுமி கருமுட்டை வெளியேறும் நாட்களைக் கண்டறிய 3 எளிய வழிகளைப் பரிந்துரைத்துள்ளார்.

உடல் அறிகுறிகள்: மாதவிடாய் சுழற்சியின்போது உடலில் ஏற்படும் மாற்றங்களான, வயிற்றின் அடிவயிற்றில் லேசான வலி (அ) அசௌகரியம், மார்பகங்களில் மென்மை, குமட்டல் மற்றும் வெள்ளைப் படுதல் அதிகமாக இருப்பது போன்ற அறிகுறிகளை வைத்து கருமுட்டை வெளியேறும் நாட்களை அறிந்து கொள்ளலாம்.

Advertisment
Advertisements

அண்டவிடுப்பின் கருவிகள் (Ovulation Kits): கர்ப்பப் பரிசோதனை செய்வது போல, இந்த கருவிகளைக் கொண்டு சிறுநீரைப் பரிசோதிப்பதன் மூலம் அண்டவிடுப்பின் நாட்களை எளிதாகக் கண்டறியலாம். இந்தக் கருவி LH ஹார்மோனின் அதிகரிப்பைக் கண்டறிந்து, அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் அண்டவிடுப்பு நடக்கும் என்பதைக் காட்டுகிறது.

அடிப்படை உடல் வெப்பநிலை (Basal Body Temperature - BBT): ஒவ்வொரு காலையிலும் எழுந்து சிறப்பு வெப்பமானி மூலம் உடலின் வெப்ப நிலையை அளக்கலாம். அண்டவிடுப்பு ஏற்பட்டால், உடல் வெப்பநிலையில் 0.5 முதல் 1 டிகிரி பாரன்ஹீட் வரை லேசான உயர்வு இருக்கும்.

மருத்துவ ஆலோசனையை எப்போது நாட வேண்டும்?

ஒரு தம்பதிக்கு 30 வயதுக்கு குறைவாக இருந்து, ஒரு வருடமாக முயற்சித்தும் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால், உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும். 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், 6 மாதங்கள் முயற்சித்தும் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால், மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று டாக்டர் வித்யாலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: