நாள் பூரா ஏசி ரூம்லே இருக்கீங்களா? இந்த பிரச்னைகள் வரலாம்; டாக்டர் விஜி எச்சரிக்கை
சிலர் என்னால் ஒரு நிமிஷம்கூட ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள். அப்படி நாள் பூரா ஏசி ரூம்லயே இருக்கிறீர்கள் என்றால் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதைக் கூறி டாக்டர் விஜி எச்சரிக்கிறார்.

நாள் முழுவதும் ஒருவர் ஏசி ரூம்லயே இருப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து போகா ஹாஸ்பிட்டல் (BogaHospital) என்ற யூடியூப் சேனலில் டாக்டர் விஜி கூறியுள்ளார்.
சிலர் என்னால் ஒரு நிமிஷம்கூட ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள். அப்படி நாள் பூரா ஏசி ரூம்லயே இருக்கிறீர்கள் என்றால் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதைக் கூறி டாக்டர் விஜி எச்சரிக்கிறார்.
Advertisment
நகரமயமாதல், வீடுகள், கட்டடங்களின் வடிவமைப்பு, இயற்கையான காற்றோட்டமான வீடு, வசிப்பிடம், பணியிடம் என்பது காணாமல் போய்விட்டது. அப்படி காற்றோட்டம் இல்லாததை சரி செய்ய, ஏசி பயன்படுத்தப்படுகிறது. ஏசி ஆடம்பரமாக கருதப்பட்ட காலம் போய், ஏசி அத்தியாவசியமான ஒன்றாக மாறி வருகிறது.
சிலர் என்னால் ஒரு நிமிஷம்கூட ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள். அப்படி நாள் பூரா ஏசி ரூம்லயே இருக்கிறீர்கள் என்றால் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதைக் கூறி டாக்டர் விஜி எச்சரிக்கிறார்.
நாள் முழுவதும் ஒருவர் ஏசி ரூம்லயே இருப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து போகா ஹாஸ்பிட்டல் (BogaHospital) என்ற யூடியூப் சேனலில் டாக்டர் விஜி கூறியுள்ளார். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
Advertisment
Advertisements
ஏசி அதிகமாக பயன்படுத்துவதால் என்னமாதிரியான பக்கவிளைவுகள் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோமா? என்று கேட்கும் டாக்டர் விஜி கூறுகையில், “தோல் ரொம்பவே வறண்டு போய்விடும். இதனால் தோலில், அரிப்பு, சொரி உருவாகும். இதை தவிர்க்க நீங்கள், மாய்ஸ்ரைசிங் கிரீம் பயன்படுத்தலாம்.
ஏசி அதிகம் பயன்படுத்தினால், அடிக்கடி ரொம்ப தலைவலி இருக்கும். ரொம்ப சோர்வாக இருக்கும். எதனால், என்றால், நீங்கள் குளிர்ச்சியான ஏசிக் காற்றை சுவாசிக்கும்போது, டிரௌசினஸ் இருக்கும்.
மூன்றாவது, குளிர்ச்சியான ஏசிக் காற்றை சுவாசிக்கும்போது தொண்டை வறண்டு போகும், வறட்டு இருமல், வீஸிங், தும்மல் போன்ற தொந்தரவுகள் இருக்கும். வீஸிங், ஆஸ்துமா இருந்தால் கண்டிப்பாக ஏசி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
அதே போல, ஏசி அதிகம் பயன்படுத்தினால், கண் எரிச்சல், கண்ணில் அரிப்பு போன்ற தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
அதுமட்டுமல்ல, உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி ரொம்பவே கம்மியாகும். அதனால், ஏசி அதிகம் பயன்படுத்தாதீர்கள்.
ஒரு வேளை உங்களால் ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்றால், ஏசி டெம்ப்ரேச்சரை 24 - 26 டிகிரி செல்சியஸ்ஸில் என வைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் நிறைய குடியுங்கள். தினசரி உடற்பயிற்சி செய்வது ரொம்ப நல்லது” என்று டாக்டர் விஜி கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.