scorecardresearch

சாப்பிடலாம்.. முகத்துக்கும் அப்ளை பண்ணலாம்.. டிராகன் பழம் பியூட்டி டிப்ஸ்!

நீங்கள் அதைச் சாப்பிடலாம் அல்லது முகத்தில் அப்ளை செய்யலாம்- இந்த பழம் உங்களுக்கு ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது.

Dragon Fruit
Dragon Fruit skin care tips Dragon fruit health benefits

பார்த்த உடனேயே உங்கள் கண்களை கவரும் டிராகன் பழம், அதன் அழகிய நிறத்துடன் உங்களை கைது செய்யும்.

பிடஹாயா என்றும் அழைக்கப்படும் இந்த பழம், தென் அமெரிக்காவிற்கு சொந்தமானது, ஆனால் வியட்நாம், தாய்லாந்து மற்றும் சீனாவிலும் காணப்படுகிறது.

ஒருமுறை பாலிவுட் நடிகை மல்லிகா அரோரா இன்ஸ்டாகிராமில், இந்த பழத்தை எவ்வளவு விரும்புவதாகக் குறிப்பிட்டு ஒரு கதையை வெளியிட்டிருந்தார். அதன் பல தோல் மற்றும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி கீழே பாருங்கள்!

தோலுக்கு நன்மைகள்

நீங்கள் அதைச் சாப்பிடலாம் அல்லது முகத்தில் அப்ளை செய்யலாம்- இந்த பழம் உங்களுக்கு ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது.

நீங்கள் முகப்பருவால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது காம்பினேஷன் தோலைக் கொண்டவராக இருந்தால், இந்தப் பழம் அதிசயங்களைச் செய்யும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.

காரணம், இதில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், முகப்பரு உள்ள பகுதிகளில், சிறிது பழக்கூழ் எடுத்து தேய்க்க வேண்டும்.

இது உங்கள் சருமத்திற்கு இயற்கையான பிரகாசத்தை வழங்குவது மட்டுமல்லாமல், டிராகன் பழங்கள் வெயிலுக்கு சிகிச்சையளிப்பதாகவும் அறியப்படுகிறது. 1/4 பங்கு டிராகன் பழத்தை, வைட்டமின் ஈ காப்ஸ்யூலுடன் கலந்து உங்கள் தோலில் தடவவும். 15 நிமிடம் அப்படியே விட்டு, பின் குளிர்ந்த நீரில் நன்கு கழுவவும்.

மேலும், நீங்கள் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசரைத் தேடுகிறீர்களானால், டிராகன் பழத்தை பயன்படுத்துங்கள், ஏனெனில் அதில் 80 சதவீதம் தண்ணீர் மட்டுமே. இது உங்கள் தோல் துளைகளை இறுக்கி, முன்கூட்டிய வயதானதைத் தடுக்க உதவும்.

நீங்கள் செய்ய வேண்டியது 1/2 டேபிள் ஸ்பூன் டிராகன் பழத்தை 1 டேபிள் ஸ்பூன் தயிருடன் கலக்கவும். பழத்தை மசித்து நன்றாக கலந்து, முகத்தில் தடவவும்.

உங்கள் கண்களுக்குக் கீழே ஒரு திக் லேயர் இருப்பதை உறுதிசெய்து, அதை 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

ஆரோக்கியத்திற்கான நன்மைகள்

இது வைட்டமின் சி நிறைந்த ஆதாரமாக இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்; இந்த பழம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

இது உங்கள் உடலில் உள்ள WBC (வெள்ளை இரத்த அணுக்கள்) எண்ணிக்கையை அதிகரிக்கிறது. அது மட்டுமின்றி, 80 சதவீதம் தண்ணீராக இருப்பதால் உடல் எடையை பராமரிக்க அல்லது குறைக்கவும் இது உதவும்.

இது நார்ச்சத்து அதிகம் உள்ள ஒரு பழமாகும், இதனால் உங்களுக்கு குடல் இயக்கத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்கிறது.

இதில் இரும்புச் சத்தும் நிறைந்துள்ளது, எனவே இது ஸ்கர்வி அல்லது இரத்த சோகையை குணப்படுத்த உதவும். மேலும் இது லைகோபீனால் செறிவூட்டப்பட்டிருப்பதால், இது உங்கள் இருதய ஆரோக்கியத்தை பராமரிக்கும், மேலும் புற்றுநோயைத் தடுக்கும்.

டிராகன் பழத்தின் தோலில் அந்தோசயனின் நிறைந்துள்ளது, இதில் நம் உடலுக்கு முன்னெப்போதையும் விட இப்போது அதிகம் தேவைப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம். அது மட்டுமின்றி, உங்கள் பார்வையை மேம்படுத்தவும் உதவுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Dragon fruit skin care tips dragon fruit health benefits