உங்கள் முன்னாள் காதலர் அல்லதுகாதலி உங்கள் கனவில் வருவதற்கான காரணங்கள்

Dreaming about your ex : உங்கள் மூன்னாள் காதலர் அல்லது காதலி உங்களுக்குள் ஏன் தோன்றுகிறார் என்பதை தெரிந்து கொள்ளாமல் இருப்பது உங்களை நம்பிக்கையிழக்கச்...

உங்கள் வாழ்க்கையில் தீர்வுகாணப்படாத விஷயங்கள் இருந்தால், அது உறவுகள் தோறும் உங்களைத் பின் தொடர்ந்து வரும். உங்களுடைய கனவின் முறைபற்றிய ரகசியத்தை கண்டறியலாம். உங்கள் முன்னாள் காதலர் அல்லது காதலி உங்களுக்குள் ஏன் தோன்றுகிறார் என்பதை தெரிந்து கொள்ளாமல் இருப்பது உங்களை நம்பிக்கையிழக்கச் செய்யும்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!

உங்களுடைய உறவுகள் குறித்த உங்களுடைய பழைய நினவுகளை திறந்து பார்ப்பதுதான் மிகவும் எரிச்சலூட்டக் கூடிய விஷயங்களில் ஒன்றாக இருக்கும். அந்த உறவில் இருந்து நீங்கள் எவ்வளவு விரைவாக கடக்கின்றீர்கள் என்பது விஷயமல்ல. சில வழிகளில் அல்லது இதர வழிகளில் அது உங்களுக்குள் வரும். சில நேரங்களில் கனவின் வடிவில் வரும். ஆம், உங்களுக்குள் அது இல்லை என்பதை எங்களிடம் உறுதியாகச் சொல்லுங்கள். இப்போதைய உறவுகளில் மகிழ்வாக இருப்பவர்கள் மத்தியில் கூட இது போன்ற கனவுகள் வருவது பொதுவானவையாக இருக்கின்றன.

எனினும், குழப்பமான அல்லது குற்றமான மன நிலையுடன் எழுந்திருப்பது, அந்த நாள் முழுமையையும் எரிச்சலாக்கிவிடமுடியும். முன்னாள் நபர்கள் குறித்த கனவுகள் என்பது நீங்கள் அவருடன் அல்லது அவளுடன் மீண்டும் இணைய விரும்பும் ஆழ்மனது ஆசையை கொண்டிருக்கிறீர்கள் என்ற அர்த்த த்தை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அல்லது இப்போதைய உங்கள் இணையருடன் நீங்கள் அதிருப்தியுற்றிருக்கிறீர்கள் என்பதும் இதன் அர்த்தம் அல்ல. கனவுகள், ஆழ்மனது ஆகியவை நீங்கள் கற்பனை செய்வதை விடவும், மிகவும் சிக்கலானவை. நமது ஆழ்மனது என்பது, தீர்க்கப்படாத விஷயங்களைச் சுற்றி அதாவது அது குழந்தைப்பருவத்தில் நடந்ததோ, முந்தைய உறவுகள் தொடர்புடையதோ அல்லது நம் அனுபவத்தின் வேறு சில அதிர்ச்சியான சம்பவங்கள் என எப்போதும் செயலாற்றிக் கொண்டே இருக்கும்.

உங்கள் வாழ்க்கையில் தீர்வுகாணப்படாத விஷயங்கள் இருந்தால், அது உறவுகள் தோறும் உங்களைத் பின் தொடர்ந்து வரும். உங்களுடைய கனவின் முறைபற்றிய ரகசியத்தை கண்டறியலாம். உங்கள் மூன்னாள் காதலர் அல்லது காதலி உங்களுக்குள் ஏன் தோன்றுகிறார் என்பதை தெரிந்து கொள்ளாமல் இருப்பது உங்களை நம்பிக்கையிழக்கச் செய்யும்.

ஒரு நல்ல பிரிவு

ஒரு மோசமான உறவில் இருந்து நீங்கள் விலக விரும்பும்பட்சத்தில், பிரிவு என்பது, திட்டமிட்டபடி நடக்காது. நீங்கள் விரும்பும், நீங்கள் தேர்வு செய்து உருவாக்கும் வார்த்தைகள் அல்லது வித்தியாசமாக நடந்து கொள்வதில் எப்போதும், ஒரு திருத்தம் இருக்கும். அவர் அல்லது அவள் உங்களுடன் இருக்கும்போது ஏதேனும் சொல்வது உங்களை வருத்தமடையச் செய்யும். இந்த வழியில், விஷயங்கள் முடிவுக்கு வருவதில் முக்கியபங்கு இருக்கிறது. ஒரு நல்ல ஆரோக்கியமான பிரிவு, மோசமான கனவுகளை தவிர்க்க உதவும்.

பூர்த்தியடையாத தேவை

தவிர அதே நேரத்தில் நீங்கள், உங்களுடைய முன்னாள் நபருடன், மகிழ்ச்சியான அல்லது கவர்ச்சியான கனவுகளைக் கொண்டிருப்பீர்கள். ஏனெனில் நீங்கள் அந்த நபருடன் போக விரும்புகிறீர்கள் என்பதால் இருக்கிறது. இது எப்போதும் இருக்காது. ஆனால், உங்களுடைய தற்போதைய உறவுடன் அந்த பழக்கம் அல்லது செயல்பாடு ஒன்றை தவற விடும்போது அப்படி இருக்கலாம். உங்களுடைய புதிய காதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தபோதிலும், சில விஷயங்கள் உறவில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும்போது அது அங்கு சாதாரணமாக இருக்கும். இந்த நிகழ்வில், பூர்த்தியடையாத தேவையானது கனவாக வல்லமையுடன் ஒரு ஒளியாக பிரகாசித்து உதவும். எனவே, இதனை வெளிக்கொணர உங்களுடைய தற்போதைய இணையுடன் இது குறித்து பேச வேண்டும்.

உறவின் மரணம்

உங்கள் முந்தைய உறவின் மரணத்தை நீங்கள் பார்ப்பது, உண்மையில் அதில் இருந்து வெளியே வருவது அசாதரமானதாக இருக்கும். ஆனால், இதன் வழியே, மரணம் என்பது உறவின் முடிவுக்கான அடையாளம் என்று நீங்கள் உணர்ந்ததன் காரணமாக அவர் அல்லது அவளின் மரணத்தை விரும்பும் தீய நபர் நீங்கள் அல்ல. உங்கள் வாழ்க்கையில் முடிவடைந்த அத்தியாயம் என்பதால் துக்கப்படுகிறீர்கள். இது ஆரோக்கியமான பிரிதலுக்கான வழியாக இருக்கிறது.

இது எப்போதும் ஒரு நபரைப் பற்றியதல்ல

உங்கள் முன்னாள் உறவானவர் உங்கள் வாழ்க்கையில் உங்கள் கனவில், ஒரு நிச்சயமான நேரம், இடம் அல்லது தருணத்தில் குறிப்பிடத்தக்கவராக இருந்திருப்பார். இது எப்போதும் நிச்சயமான ஒரு நபரைப் பற்றியதல்ல. தவிரவும் அது உங்களுடன் தொடர்புடைய நபரின் ஒரு உணர்வாக அல்லது ஒரு நினைவாகவும் இருக்கும். அவர் அல்லது அவள் என்ன பிரதிநிதித்துவத்தை கொண்டிருந்தார் என்பதைப் புரிந்து கொள்வதற்கான வரைபடத்தைக் கொடுப்பதாகவும் அது இருக்கும். தவிர நீங்கள் பணியாற்ற வேண்டிய வழி, நடைமுறை அதனைஎதிர்கொள்வதற்கு, என்னவெல்லாம் உங்களுக்குத் தேவை என்பதற்கும் இது உதவும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close