கனவுகள் மனித வாழ்க்கையில் ஒரு அற்புதமான, மர்மமான அம்சமாகும், கனவுகள் என்பது நினைவலைகளால் உருவாக்கப்படும் காட்சிகள். இந்த நினைவுகள் பல கதாபாத்திரங்களை உருவாக்கி நம்பமுடியாத கற்பனை உலகத்திற்கு நம்மைக் கூட்டிச்செல்லும்.
95% கனவுகள் கண் விழிக்கும் போது மறந்து விடுகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். கனவுகள் சிலருக்குச் சுகமானவையாகவும் வேறு சிலருக்குப் பெரும் நெருடல்களை அளிப்பதாகவும் அமைந்துவிடுகின்றன.
ஒருவர் ஒரே கனவைத் திரும்பத் திரும்ப காணும் போது ஒருவேளை இதற்குள் வேறு எதுவும் அர்த்தம் மறைந்திருக்கிறதா என்று அவர்களை யோசிக்க செய்யலாம்.
நீங்களும் ஏன் ஒரே கனவைத் தொடர்ந்து காண்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறுகிறீர்கள் என்றால், உங்கள் கனவுகளை டீகோட் செய்யவும், உங்கள் ஆழ் மனதைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ளவும் உதவும் சில பயனுள்ள தகவல்கள் இங்கே உள்ளன.
ஸ்லீப் ஃபவுண்டேஷனின் கூற்றுப்படி, கனவுகள் அவற்றின் உள்ளடக்கத்தில் மறைந்திருக்கும் அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றன என்பது ஃப்ராய்டின் கனவுக் கோட்பாட்டின் பிரபலமான அங்கமாகும். கனவின் உள் அர்த்தங்களை பொருட்படுத்தாமல், தொடர்ச்சியான கனவுகளை காண்பது அடிப்படை சிக்கல்களை சுட்டிக்காட்டக்கூடும் என்று அது மேலும் கூறியது.
திரும்பத் திரும்ப வரும் கனவுகளின் அர்த்தம் என்ன என்பதை விளக்கும் மருத்துவ உளவியலாளர் ஐஸ்வர்யா ராஜ்,, அவை காலப்போக்கில் வழக்கமான அடிப்படையில் ஏற்படும் கனவுகள், என்று கூறினார்.
இந்தக் கனவுகளில் அடிக்கடி ஒரே மாதிரியான நபர்கள், காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் இடம்பெறும், சிலருக்கு சற்று வேறுபடலாம். தொடர்ச்சியான கனவுகள் எப்போதும் ஒரு கோளாறின் அறிகுறியாக இருக்காது, ஆனால் அவை தீர்க்கப்படாத சிரமங்கள் அல்லது கவலையின் அறிகுறியாக இருக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட நடத்தை அல்லது சிந்தனையில் யாரோ ஒருவர் இருப்பதற்கான ஒரு துப்பாக கூட இருக்கலாம்.
பெரியவர்களில் மீண்டும் மீண்டும் வரும் கனவுகள் மோசமான உளவியல் நல்வாழ்வுடன் தொடர்புடையவை என்றும் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
இதை ஒப்புக்கொண்ட மருத்துவ உளவியல் ஆலோசகர் சதீஷ் குமார் சிஆர் கனவுகள் ஒருபோதும் மனநல மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கான மருத்துவ அம்சங்களாக கருதப்படுவதில்லை; ஒரு நபர் தனது வாழ்க்கையில் என்ன செய்கிறார் என்பதன் வெளிப்பாடுகள் மட்டுமே அவை.
ஒரு நபர் விழித்திருக்கும் மனதில் (conscious mind) நடப்பதை, இரண்டு முறை கனவுகளில் காணலாம், ஆனால் ஒரு நபர் நீண்ட காலமாக எதை அனுபவித்தாலும், அது நனவில் இல்லை, மாறாக ஆழ் மனதில் உள்ளது.
தொடர் கனவுகளாக வெளிப்படும் அவை தீர்க்கப்படாத உணர்ச்சி மோதல்கள் என்று அழைக்கப்படுகின்றன, என்று அவர் காரணத்தை விளக்கினார்.
ஆனால், இதை யார் அதிகம் அனுபவிக்கிறார்கள்? ஒரு பிரச்னை வரும் போது, நம்மில் பெரும்பாலோர் அவற்றைத் தீர்க்க முயற்சிக்கிறோம் என்று டாக்டர் குமார் கூறினார்.
ஆனால் ஒரு பிரச்னை இருந்தும், அதற்காக ஒன்றும் செய்யாமல், எல்லாம் சரியாகும் நேரம் வரை காத்திருக்கும் போது, அது தீர்க்கப்படாத உணர்ச்சிப் பிரச்சினைகளை உருவாக்க வழிவகுக்கும்.
எனவே, மக்கள் தங்கள் பிரச்சினைகளை அடக்கி அல்லது மறுத்து, அதற்காக எதுவும் செய்யாமல் செயலற்ற நிலையில் இருக்கும்போது, அவர்களுக்கு மீண்டும் மீண்டும் கனவுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம், என்று அவர் கூறினார்.
வாழ்க்கையில் அதிக அளவு மன அழுத்தம் மற்றும் கவலையை அனுபவிப்பவர்கள் ஒரே கனவுகளை மீண்டும் அனுபவிப்பார்கள் என்று ராஜ் மேலும் கூறினார்.
தொடர்ந்து வரும் கனவுகள் மன உளைச்சலை ஏற்படுத்தினால் அல்லது அன்றாட வாழ்க்கையின் செயல்பாட்டில் குறுக்கிட்டு அவர்களின் சிந்தனை செயல்முறைக்கு இடையூறு விளைவித்தால், அது கவலைக்குரியதாகிறது.
நாம் அடிக்கடி கனவு காண்கிறோம் ஆனால், பொதுவாக கனவுகள் பெரும்பாலும் நினைவில் இருப்பதில்லை. தொடர்ந்து கனவு காண்பதில் தவறில்லை.
கெட்ட கனவுகளால் ஏற்படும் மன உளைச்சல்கள் குறித்து மக்கள் கூறும் போது, அது ஒரு உளவியலாளரால் கவனிக்கப்பட வேண்டும், என்று டாக்டர் குமார் கூறினார். முதலில் கனவுகளை நினைவில் கொள்வதற்காக ஒரு நாட்குறிப்பில் எழுதுங்கள், பின்னர் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தைப் பெற ஒரு உளவியலாளரிடம் விளக்கம் பெறுங்கள்.
இதை ஒப்புக்கொண்ட ராஜ், வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைச் செய்வதற்கும் அவற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் ஒருவரின் தொடர்ச்சியான கனவுகளின் அடிப்படை அர்த்தத்தை வெளிப்படுத்த முயற்சிப்பது முக்கியம் என்று கூறினார்.
தொடர்ந்து வரும் கனவுகளை நிர்வகிப்பதற்கு, தியானம் (lucid dreaming, dream journaling, and meditation) போன்ற நுட்பங்களை ஒருவர் முயற்சி செய்யலாம், ஒரு சிகிச்சை நிபுணரின் உதவியோடு எந்தவொரு அடிப்படையான சிக்கல்களைத் தீர்க்கவும், அதற்கான தீர்வைக் கண்டறியவும் முடியும்.
கூடுதலாக, வெவ்வேறு நேரத்தில் படுக்கைக்குச் செல்ல முயற்சிப்பது, படுக்கைக்குச் செல்வதற்கு முன் சில உணவுகள் அல்லது பானங்களைத் தவிர்ப்பது, வேறு நிலையில் தூங்குவது அல்லது அமைதியான உறக்கச் சூழலை மேம்படுத்துவதற்கு நிதானமான உறக்க நேர வழக்கத்தை அமைப்பதும் உதவக்கூடும்.
நல்ல சுய கவனிப்பு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி, நினைவாற்றல் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல் ஆகியவை தூக்கத்திற்கு முன் உங்கள் மனதை அமைதிப்படுத்தலாம், இது மீண்டும் மீண்டும் வரும் கனவுகளை நிர்வகிக்க முடியும், என்று அவர் கூறினார்.
தொடர்ச்சியான கனவுகளை நிர்வகிப்பதற்கு நேரம், பொறுமை மற்றும் சாத்தியமான உதவி தேவை. அவற்றை கையாளும் போது ஒருவர் கட்டுபாடாகவும், சீராகவும் இருக்க வேண்டும், என்று நிபுணர் கூறி முடித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.