கெட்ட கொழுப்பு வெளியேறி உடல் எடை குறையும்… தினமும் காலையில் இந்த டீ குடிங்க; டாக்டர் நித்யா

உடல்பருமன் குறைவதற்கு என்னென்ன முறைகள் மேற்கொள்ள வேண்டும்? எளிதாக பின்பற்றக் கூடிய டயட் முறைகள் என்ன? ஆரோக்கியமான முறையில் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையை எப்படி குறைப்பது என்று மருத்துவர் நித்யா விளக்குகிறார்.

உடல்பருமன் குறைவதற்கு என்னென்ன முறைகள் மேற்கொள்ள வேண்டும்? எளிதாக பின்பற்றக் கூடிய டயட் முறைகள் என்ன? ஆரோக்கியமான முறையில் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையை எப்படி குறைப்பது என்று மருத்துவர் நித்யா விளக்குகிறார்.

author-image
WebDesk
New Update
toxine

வாதம், பித்தம், கபம் என்பது ஆயுர்வேதத்தில் 3 முக்கிய தோஷங்களாகும். இந்த 3 தோஷங்களும் உடலில் சமநிலையில் இருக்க வேண்டும், இல்லை என்றால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படும்.  வாதம், பித்தம், கபம் ஆகியவற்றின் சமநிலையைப் பராமரிக்க, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை சரிசெய்ய வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அப்படி, 3 முக்கிய தோஷங்களுக்கும் சிக்கல் ஏற்படாமல், எளிய முறையில் உடல் பருமனை குறைப்பது எப்படி? என்று Mr Ladies என்ற யூடியூப் பக்கத்தில் மருத்துவர் நித்யா விளக்கி உள்ளார்.

Advertisment
உடல் பருமன் குறைக்க வேண்டும். அதே சமயம் உடலில் இருக்கக்கூடிய பிரச்னைகளும் குணமாகும் வேண்டும் என்று கேட்பவர்கள் இந்த டீயை காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். டீ தயாரிக்க என்னென்ன மூலிகைகள் தேவை என்றால், சுண்டை வற்றல், தனியா விதைகள்,  மஞ்சள் தூள், குறு மிளகு, ஓமம், சுக்கு, சதகுப்பை ஆகியன. தனியா விதைகள் தவிர்த்து மற்ற மூலிகைகள் 50 கிராம் என்ற அளவில் எடுக்க வேண்டும், தனியா 100 கிராம், சுண்டை வற்றல் 100 கிராம் எடுக்க வேண்டும். இதனை, லேசாக வறுத்து டீ பொடி மாதிரி ரெடி பண்ண வேண்டும்.

தினமும் காலைல ஒரு ஸ்பூன் அளவு எடுத்து 2 கிளாஸ் தண்ணில போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு, வடிகட்டி குடிக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் நித்யா. சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இதனுடன் சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம். சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு உள்ளவர்கள் 5 துளி எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். தினமும் காலையில் குடிக்கும்போது உடல்ல இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் குறையும், மலச்சிக்கல் பிரச்னையும் சரியாகும் என்கிறார் மருத்துவர் நித்யா. ஜிம், வாக்கிங் எக்சர்சைஸ், யோகா செய்பவர்கள் இந்த டீயை குடித்துவிட்டு பண்ணும்போது உடல்ல இருக்கக்கூடிய டாக்சின்ஸ் நன்றாக குறைய ஆரம்பிக்கும். உடல்ல ஏற்படக்கூடிய பல பிரச்னைகள் தீரும் என்கிறார் மருத்துவர் நித்யா.

Advertisment
Advertisements

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

General health tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: