Advertisment

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுடன் இசை நிகழ்ச்சி நடத்திய ட்ரம்ஸ் சிவமணி; நெகிழ்ந்த கோவை

பணக்காரர்கள் அனைவரும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் – கோவை நிகழ்ச்சியில் ட்ரம்ஸ் சிவமணி வேண்டுகோள்

author-image
WebDesk
New Update
Kovai Sivamani autism

கோவை சின்னவேடம்பட்டியில் அமைந்துள்ள கௌமார பிரசாந்தி சிறப்பு பள்ளியை சார்பில் 8 மாவட்டத்தில் இருந்து 15 பள்ளிகளை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு இசை நிகழ்வு கோவை (தனியார்) குமரகுரு கல்லூரியில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ட்ரம்ஸ் சிவமணி கலந்து கொண்டார். பின்னர் ட்ரம்ஸ் சிவமணி உடன் சிறப்பு பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து இசை வாத்தியங்களை இசைத்து அசத்தினர். இந்த நிகழ்ச்சி கண்போரை வெகுவாக கவர செய்தது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ட்ரம்ஸ் சிவமணி கூறியதாவது; இந்த நிகழ்ச்சிக்காக மும்பையில் இருந்து வந்துள்ளேன். பணக்காரர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்க வேண்டும். பணம் உள்ளவர்கள் தயவு செய்து உதவுங்கள் என்று ட்ரம்ஸ் சிவமணி கேட்டுக்கொண்டார்.

Advertisment
Advertisement

அதனை தொடர்ந்து கௌமார பிரசாந்தி சிறப்பு பள்ளி தாளாளர் தீபா மோகன் கூறியதாவது; ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்றால் சமூகத்தில் இருப்பவர்கள் ஏளனமாக அந்த குழந்தைகளை பார்க்கின்றனர். இதனால் பெற்றோர்கள் கூனி குறுகி மனம் உடைந்து வருகிறார்கள் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்த மாதிரி குழந்தைகள் இப்படித்தான் இருப்பார்கள் என்று சமூகத்தில் இருப்பவர்கள் உணர வேண்டும். இதற்காக தான் இந்த குழந்தைகளை வைத்து இதுபோல நடத்த முடியும் என்பதற்காக தான் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். சமூகத்தில் இந்த குழந்தைகளுக்கு நல்ல மதிப்பு கிடைக்க வேண்டும் என்று கூறினார்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த இசை நிகழ்ச்சியானது நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ரஹ்மான், கோவை 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment