Advertisment

நெய் மணக்கும் முருங்கை கீரை சாதம்; இப்படி செய்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க!

ஒரு முறை நீங்க, ,முருங்கைக் கீரையில் சாதம் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

ஒரு முறை நீங்க, ,முருங்கைக் கீரையில் சாதம் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும். 
தேவையான பொருட்கள்
 பச்சரிசி - ஒரு கப், துவரம் பருப்பு - கால் கப், முருங்கை கீரை - அரை கப், பெரிய வெங்காயம் - 1, உப்பு - தேவையான அளவு, நெய் - 2 டீ ஸ்பூன், உளுந்தம் பருப்பு - 2 டீ ஸ்பூன், பொட்டுக் கடலை - 2 டீ ஸ்பூன், பச்சரிசி - 2 டீ ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கொப்பரைத் துருவல் - 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 1 டீ ஸ்பூன்.
தாளிக்க 
கடுகு- அரை டீ ஸ்பூன், உளுந்தம் பருப்பு - ஒரு டீ ஸ்பூன், பூண்டு - 3 பற்கள், எண்ணெய் - 1 டீ ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1
செய்முறை: அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாக கழுவ வேண்டும்மூன்றே முக்கால் கப் தண்ணீர் ஊற்றி இரண்டையும் சேர்த்து குக்கரில் வேக வைக்க வேண்டும். தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும். 2 விசில் வந்ததும் தீயை குறைத்து, 5 நிமிடம் கழித்து இறக்குங்கள்.. வெங்காயத்தை பொடியாக நறுக்கி வையுங்கள். பூண்டு பற்களை சிறு சிறு துண்டுகளாக நசுக்கி கொள்ளுங்கள்.வறுக்க வேண்டிய பொருட்களை வறுத்து, அதனை பொடியாக்கி கொள்ளுங்கள். எண்ணெய் காய வைத்து கடுகு, உளுந்தம் பருப்பு, முருங்கை கீரை, காய்ந்த மிளகாய் தாளியுங்கள்.
பிறகு பூண்டு சேர்த்து வறுத்து, வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இவற்றை சோற்றில் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் வறுத்து பொடித்து வைத்துள்ள பொடியையும், நெய்யையும் சேர்த்து ஒன்றாக கலந்து விடுங்கள். இப்போது சுவையான முருங்கை கீரை சாதம் ரெடி. இரும்புச் சத்து அதிகமுள்ள உணவுப் பொருள், முருங்கைக் கீரை. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடவேண்டிய உணவு இது. தவிர்க்காதீர்கள்.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment