Advertisment

மணமும் சுவையும் மயக்கும்: முருங்கைக்காய் சாம்பார் எளிய செய்முறை

Drumstick Sambar Tamil Video: முருங்கை சார்ந்த உணவுப் பொருட்களில் கிடைக்கும் இரும்புச் சத்து; அதன் மூலமாக நாம் பெறும் இம்யூனிட்டி!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Drumstick Sambar Recipe with Video Tamil news

Drumstick Sambar Recipe with Video

Drumstick Sambar Recipe, Drumstick Sambar Tamil Video: முருங்கைக்காய் சார்ந்த உணவை விரும்பாதவர்கள் இல்லை. கூட்டாக, குழம்பாக முருங்கைக்காயை மட்டுமல்ல, முருங்கைக் கீரையையும் பயன்படுத்தி வருகிறோம். காரணம், முருங்கை சார்ந்த உணவுப் பொருட்களில் கிடைக்கும் இரும்புச் சத்து; அதன் மூலமாக நாம் பெறும் இம்யூனிட்டி!

Advertisment

இந்த முறை முருங்கைக்காயை பயன்படுத்தி மணமும் சுவையும் மிகுந்த முருங்கைக்காய் சாம்பார் தயார் செய்வது எப்படி? எனப் பார்க்கலாம். தொடர்ந்து படியுங்கள்.

Drumstick Sambar Tamil Video: முருங்கைக்காய் சாம்பார்

முருங்கைக்காய் சாம்பார் செய்யத் தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு - 100 கிராம், காயம் - 1/4 தேக்கரண்டி, முருங்கைக்காய் துண்டுகள் - 8, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 1, சின்ன வெங்காயம் - 3, மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி, மல்லித் தூள் - 2 மேஜைக் கரண்டி, சீரகத் தூள் - 1 மேஜைக் கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,

புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு, மல்லித் தழை - சிறிது

தாளிக்க தேவையான பொருட்கள்: எண்ணெய் - 3 மேஜைக் கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி, வெங்காயம் - சிறிது, கறிவேப்பிலை - சிறிது

முருங்கைக்காய் சாம்பார் செய்முறை:

ஒரு குக்கரில் பருப்பு, காயம், மஞ்சள் தூள் கலந்து அவை முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் நன்கு வேக வைத்துக் கொள்ளவும். தக்காளி, மிளகாயை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக் கொள்ளவும். புளியை 300 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

சாம்பார் வைக்கும் பாத்திரத்தில் 300 மில்லி புளித் தண்ணீருடன் முருங்கைக்காய், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கொதிக்க வைக்கவும். 5 நிமிடங்கள் ஆனதும் மிளகாய்த் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து மசாலா வாடை போகும்வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் வேகவைத்துள்ள பருப்பை போட்டு கலக்கி விடவும். கொதித்ததும் மல்லித் தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கிவிடுங்கள்.

தாளிக்க அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, வெங்காயம் போட்டு தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் சாம்பாரில் சேர்த்து நன்றாக கலக்கிவிடவும். இப்போது சுவையான முருங்கைக்காய் சாம்பார் ரெடி.

மணமும் டேஸ்டும் மிகுந்த முருங்கைக்காய் சாம்பார் செய்து மகிழுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment