அவசரமான பரபரப்பான உலகத்தில் நிறைய பொருட்கள் விணாகிக் கொண்டிருக்கின்றன. அப்படி வீணாகாமல் தடுப்பதற்கு சமூக ஊடகங்களின் காலத்தில் பலரும் பல ஐடியாக்களை கூறுகிறார்கள்.
சமூக ஊடகமான யூடியூப்பில் அதிகம் பகிரப்படும் வீடியோ சமையல் தொடர்பான விடியோக்கள்தான். சமையல் கலைஞர்கள், நன்றாக சமைக்கத் தெரிந்தவர்கள் மட்டுமில்லாமல், சமைக்கத் தெரிந்த அனைவருமே வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில், பலரும் பயனுள்ள சமையல் குறிப்பு வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், அனைவருக்கும் பயனுள்ள ஒரு சமையல் குறிப்பு ஒன்றை தருகிறோம். காய்கறி கடைகளில் இருந்து முருங்கைக்காய் வாங்கி வந்து ஃபிரிட்ஜில் வைத்தால், 2-3 நாட்களில் ஒரு மாதிரியாக கருத்து கெட்டியாகிவிடும். முருங்கைக்காய் வதங்கிப் போய் சில நேரங்களில் சமைக்க முடியாத அளவுக்கு கெட்டுப்போய்விடும். அதனால், முருங்கைக்காயை வாங்கி வந்தவுடன் சமைத்துவிட வேண்டும் என்று முழுவதுமாக பயன்படுத்துவார்கள். ஆனால், முழுவதுமாக சாப்பிட முடியாமல், மீதம் இருப்பதை குப்பையில் போடுவார்கள். இல்லையென்றால், ஃபிரிட்ஜில் வைத்தாலும் கருத்துப்போய் கெட்டியாகி, வதங்கி கெட்டுவிடும்.
உங்கள் வீட்டில் ஃபிரெஷ்ஷாக வாங்கி வரும் முருங்கைக்காயை இந்த டிப்ஸை ஃபாலோ செய்தால், ஒரு மாதம் வரை முருங்கைக்காயை ஃபிரெஷ்ஷாக வைத்திருக்கலாம்.
முருங்கைக்காயை வாங்கி வந்த உடன், அதை மிதமான அளவில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். முருங்கைக்காயை நறுக்கும்போது வரும் நார்களை உரித்து நீக்கிவிடுங்கள். பிறகு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கழுவி விடுங்கள். பின்னர் அந்த முருங்கைக்காய் துண்டுகளை ஃபேன் காற்றில் ஈரம் போக காற்றாட வையுங்கள். ஈரம் இல்லாமல் துடைத்து ஈரம் இல்லாத ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது தேங்காய் எண்ணெய் கால் டீஸ்பூன் ஊற்றி, முருங்கைக்காய் துண்டுகள் முழுவதிலும் நன்றாகத் தடவுங்கள். இப்போது வேறு ஒரு பாத்திரம் எடுத்து, அதில் ஒரு டிஷ்யூ பேப்பர் போட்டு அதில் இந்த முருங்கைக்காய் போட்டு மூடி வைத்தால் 1 மாதம் ஆனாலும் இந்த முருங்கைக்காயை நீங்கள் வாங்கி வரும்போது, எப்படி ஃபிரெஷ்ஷாக இருந்ததோ அதே மாதிரி, அப்படியே ஃபிரெஷ்ஷாக இருக்கும். இந்த டிப்ஸை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.