உங்கள் சருமத்தில் கடுமையான ரசாயனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கைப் பொருட்களுக்கு மாற விரும்பினால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.
நெய் மட்டுமே கொண்டு நீங்களே வீட்டில் செய்யக்கூடிய சூப்பர் மாய்ஸ்சரைசர் ரெசிபி இங்கே உள்ளது.
தேவையான பொருட்கள்
நெய்
தண்ணீர்
செய்முறை
இரண்டு கரண்டி நெய்யை எடுத்துக் கொள்ளவும். குளிர்ந்த நீரை சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
வீடியோவில் காட்டியபடி, செமி சாஃப்ட் மிக்ஸ்ராக வரும் வரை தண்ணீரைச் சேர்த்து சேர்த்து நீக்கி, கிளறி கொண்டே இருக்கவும். பிடித்த அத்தியாவசிய எண்ணெயில் சில துளிகள் சேர்க்கவும்.
ஒரு கண்ணாடி ஜாடியில் சேமித்து பிரிட்ஜில் வைக்கவும்.
நெய் எவ்வாறு உதவுகிறது?
இது வறண்ட சருமத்துக்கு சிறந்தது. குளித்த பிறகு மாய்ஸ்சரைசர் போல அப்ளை செய்யவும்.
இந்த வாஷ்டு நெய்யில் ஒமேகா 3, 9 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை உள்ளன, இவை அனைத்தும் சருமத்திற்கு மிகவும் நல்லது.
ஈரப்பதமாக்குகிறது மற்றும் வயதான அனைத்து அறிகுறிகளையும் தாமதப்படுத்துகிறது.
இதை தொடர்ந்து பயன்படுத்த சன் ஸ்பாட்ஸ் மறையும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“