வறண்ட சருமம் ஒரு தொல்லை! அரிப்பு, எரிச்சல், சுருக்கங்கள் எனப் பல பிரச்சனைகளுக்கு இது வழிவகுக்கும். ஆனால் கவலை வேண்டாம், ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் இருந்தால் போதும், இந்த சங்கடங்களைத் தள்ளி வைக்கலாம்.
டயட்டீஷியன் லாவ்லீன் கவுர், வீட்டிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய ஒரு மாய்ஸ்சரைசர் ரெசிபியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த செய்முறை:
தேவையான பொருட்கள்
50 மில்லி - ரோஸ் வாட்டர் (பன்னீர்)
1 டீஸ்பூன் - கிளிசரின்
1 - வைட்டமின் ஈ காப்ஸ்யூல்
செய்முறை
அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். ஷேக் செய்து பிறகு முகத்தில் அப்ளை செய்யவும். இந்த எளிய தீர்வு, உங்கள் சருமத்துக்கு அதிசயங்களைச் செய்யும் என்று கவுர் கூறினார்.
சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் வைத்திருக்க மாய்ஸ்சரைசர் இன்றியமையாதது. உங்கள் சருமத்தின் தேவைக்கேற்ப சரியான மாய்ஸ்சரைசரைத் தேர்ந்தெடுத்து, தவறாமல் பயன்படுத்துவதன் மூலம் வறட்சி மற்றும் பிற சரும பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.