scorecardresearch

வறண்ட சருமம் டூ இயற்கை பளபளப்பு: எளிமையான இரட்டை க்ளென்சிங் முறை

Oily Skincare Tips Tamil ஒவ்வொரு முறையும் வெளியே சென்று வீடு திரும்பும்போது முகத்தில் அதிகப்படியான தூசி ஒட்டிக்கொள்ளும். இதற்கு இரட்டிப்பு க்ளென்சிங் மிகவும் உதவும்.

Dry Skin Double Cleansing Skincare and Beauty Tips Tamil
Dry Skin Double Cleansing Skincare and Beauty Tips

Dry Skin Double Cleansing Skincare Tips Tamil : காலநிலை மாற்றம் ஏராளமான சரும மாற்றங்களையும் ஏற்படுத்தும். குறிப்பாக வெளியில் படரும் மாசு, உங்கள் சருமத்தைச் சேதமடையச் செய்கின்றன. ஆனால், இந்த எளிமையான இரட்டை க்ளென்சிங் உங்கள் சருமத்தை இரட்டிப்பு பாதுகாப்பாக வைக்கிறது. அதிலும் ஒவ்வொரு முறையும் வெளியே சென்று வீடு திரும்பும்போது முகத்தில் அதிகப்படியான தூசி ஒட்டிக்கொள்ளும். இதற்கு இரட்டிப்பு க்ளென்சிங் மிகவும் உதவும்.

அது ஏன் அவசியம்?

இரட்டை சுத்திகரிப்பு, சரியான வழியில் செய்யும்போது, உங்கள் சருமத்தை மிகக் குறுகிய காலத்தில் மேம்படுத்த உதவும் என்று சரும நிபுணர் டாக்டர் நிகேதா சோனவனே கூறுகிறார். நிறமிகளை விலக்கி வைக்க இது ஒரு சிறந்த வழி.

இரட்டை சுத்திகரிப்பு என்றால் என்ன?

இரட்டை சுத்திகரிப்பு என்பது உங்கள் சரும மேற்பரப்பின் ஒப்பனை, எஸ்.பி.எஃப் மற்றும் எண்ணெய்ப் பசையை சுத்தப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மிசெல்லார் தண்ணீருடன் (micellar water) ஆழமான நீர் சார்ந்த சுத்திகரிப்பு உள்ளது.

இருப்பினும், சுத்தப்படுத்தும் முறை உங்கள் சரும வகையைப் பொறுத்து மாறுபடும் என்று டாக்டர் சோனவனே குறிப்பிடுகிறார். மந்தமான தன்மை, தடிப்புகள் மற்றும் நிறமிக்கு ஆளாகக்கூடிய வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

ரோஸ்ஹிப் எண்ணெய்யுடன் குளிர் அழுத்தப்பட்ட கரிம ஜோஜோபா எண்ணெய்யைப் பயன்படுத்துங்கள்.

நன்மைகள்

ஜோஜோபா எண்ணெய் உங்கள் சருமத்தின் இயற்கையான எண்ணெய்யைப் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில் ரோஸ்ஹிப் எண்ணெய் இறந்த செல்களை வெளியேற்றும். வறண்ட சருமம் இயற்கையாகவே குறைந்த எண்ணெய்யை உற்பத்தி செய்கிறது. இது மந்தமான தோற்றத்திற்குக் காரணமாகிறது. மேலும், இறந்த செல்கள் வறண்ட சருமத்தில் அதிகமாகக் குவிகின்றன. இந்த இரண்டு எண்ணெய்களின் கலவையும் உங்கள் சருமத்தைப் புதுப்பிக்க உதவுகிறது.

அதை எப்படிச் செய்வது?

* உங்கள் கைகளில் எண்ணெய் துளிகளிட்டு ஒன்றாகத் தேய்த்து நன்கு சூடேற்றுங்கள். பின்னர் மென்மையாக முகத்தில் 2-5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்.

* எண்ணெய் சுத்திகரிப்புக்குப் பிறகு, உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். அடுத்து, முகத்தை இரண்டு முறை துடைக்க மிசெல்லார் தண்ணீரைப் பயன்படுத்துங்கள். உங்கள் முகத்தை சோப்பு இல்லாத சுத்தப்படுத்தியால் கழுவலாம் அல்லது கடலை மாவைப் பயன்படுத்தலாம்.

* தோல் நெரிசலான சிலிகான் கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Dry skin double cleansing skincare and beauty tips tamil

Best of Express