/indian-express-tamil/media/media_files/RSuyPN1KhHE3ECRJOXbj.jpg)
Duck walking health benefits
கர்ப்ப காலத்தில் வாத்து நடை பயிற்சி (duck walking) என்பது தாய்மார்களுக்கு மிகவும் முக்கியமான பயிற்சியாகும். உண்மையில், குழந்தை தலை குனிந்த நிலையில் இருந்தால், 30 வாரங்களில் இருந்து வாத்து நடைபயிற்சி செய்ய கர்ப்பிணிப் பெண்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது squats, lunges, மற்றும் crab walking ஆகியவற்றை உள்ளடக்கியது. இது ஒரு சமநிலையை உருவாக்குகிறது மற்றும் கர்ப்ப காலத்தில் பொதுவாக அனுபவிக்கும் கீழ் முதுகு வலியைக் குறைக்க உதவுகிறது.
இயற்கை கருவுறுதல் ஆலோசகர் டாக்டர் கவிதா வெங்கடேசனின் கூற்றுப்படி, வாத்து நடைபயிற்சி, தொடை தசைகளை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் சிறந்த இடுப்பு இயக்கத்திற்கு உதவுகிறது, இது இறுதியில் பிரசவத்தின் போது பெண்கள் அனுபவிக்கும் வலியைக் குறைக்க உதவுகிறது.
டக் வாக் செய்யும்போது உடலின் மொத்த எடையும் காலில்தான் இருக்கும். இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம் கால் தசைகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாகின்றன, இது பிரசவ நேரத்திற்கு உதவுகிறது, என்று டாக்டர் கவிதா தெளிவுபடுத்தினார்.
கர்ப்ப காலத்தில் வாத்து நடைபயிற்சி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.
கர்ப்பம் வளரும்போது, ​​ஈர்ப்பு மையம் மாறுகிறது, கீழே விழுந்து காயங்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. வாத்து நடை பயணத்தில் ஈடுபடுவது சமநிலையை மேம்படுத்துகிறது, தற்செயலாக கீழே விழும் வாய்ப்பைக் குறைக்கிறது, தாய் மற்றும் வளரும் குழந்தையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது, என்று மகப்பேறு மருத்துவர் பத்மா ஸ்ரீவஸ்தவாகூறினார்.
இது குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது, பல கர்ப்பிணிப் பெண்கள் அனுபவிக்கும் மலச்சிக்கல் போன்ற பொதுவான பிரச்சினைகளைப் போக்குகிறது. வாத்து நடை பயிற்சி செய்தால், அது குழந்தையின் தலையை கீழே இறங்க அனுமதிக்கிறது, இதனால் மாதத்திற்குள் பிரசவம் எளிதாக இருக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் குறிப்பிட்ட கர்ப்ப நிலைக்கு பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த, தங்கள் சுகாதார நிபுணருடன் கலந்தாலோசித்த பிறகு, இந்த பயிற்சியை தங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும், என்று டாக்டர் பத்மா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.