துர்கா ஸ்டாலின் எப்படி ஸ்பெஷல் மீன் குழம்பு வைக்கிறார் என்பது தொடர்பாக வீடியோ வெளியானது. இந்நிலையில் அவர் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் உள்ள பொருட்கள் பற்றி அவர் பேசுகிறார்.
” எல்லா வீட்டில் இருப்பதுபோல், ப்ரீசரில் சாக்லேட், அடிபட்டால் வீக்கத்தை தணிக்க உதவும் ஐஸ் பேக் உள்ளது. நானும், ஸ்டாலின் அவர்களும் டார்க் சாக்லேட் தினமும் ஒன்று சாப்பிடுவோம். இதில் இனிப்பு அதிகம் இருக்காது. பனகற்கண்டு வைத்திருக்கிறேன். தண்ணீருக்குள் நெல்லிக்காய் மற்றும் பச்சை மிளகாய் போட்டு அதை குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருப்போம். இந்த நெல்லிக்காய்யை கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து மோர் செய்து குடிப்போம். துருவிய தேங்காய், ஊருகாய் இருக்கிறது. எல்லா வகையான ஊருகாயும் வீட்டில்தான் செய்வோம். பேரிச்சம்பழம், இஞ்சி- பூண்டு அரைத்தது வைத்திருக்கிறேன்.
இரண்டு நாளைக்கு ஒரு முறை இட்லி- தோசை மாவு அரைத்து அதை குளிர் சாதனப்பெட்டியில் வைத்துகொள்வோம். மீந்து போன குழம்பையும் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருப்போம். மீன் வறுக்க வேண்டும் என்றால், அந்த மசலாவை சேர்த்து வைத்திருப்போம். எங்கள் ப்ரிஜில் பால், தயிர் , முட்டை எப்போதும் இருக்கும். மேலும் எல்லா வகையான காய்கறிகளும் வாங்குவோம். தேவையான காய்கறி வீட்டில் இருக்கும். எலுமிச்சை பழங்கள் கண்டிப்பாக இருக்கும். இந்நிலையில் ப்ரிஜிக்கு வெளியே, அலங்காரத்திற்காக சில ஸ்டிக்கர் படங்கள் ஒட்டப்பட்டுள்ளது. வெளியூர்களுக்கு செல்லும்போது அங்கு கிடைத்தவற்றை இப்படி ஒட்டிவைத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.
மேலும் ப்ரிஜில் உள்ள பொருட்களை வரிசையாக அடுக்க வேண்டும் என்று வீட்டின் பணியாளர்களிடம் கூறினார். பச்சை மிளகை, எலுமிச்சை சாறில் பொட்டு ப்ரிஜில் வைத்திருக்கிறோம். அதை அப்படியே சாப்பிடுவோம் என்று அவர் கூறினார்.