துர்கா ஸ்டாலின் தனது வீட்டில் இருக்கும் பூஜை அறை தொடர்பாக விவரமாக பேசி உள்ளார். இறைவனிடம் அவர் எவ்வளவு நெருக்கம் என்பதையும் அவர் விவரித்துள்ளார்.
நாயகி டிவிக்கு அவர் கொடுத்த நேர்காணலில் தனது வீட்டு பூஜை அறை பற்றி விரிவாக அவர் பேசியதாவது ” தற்போது தனி அறையாக பூஜை இருப்பதால், எல்லா சாமி படங்களையும் எப்படி வேண்டுமோ அப்படி செய்யச் சொல்லி வைத்திருக்கிறேன். தனித் தனியாக ப்ரேம் செய்து சாமி படங்கள் உள்ளன. முருகர், விநாயகர், சரஸ்வதி என்று எல்லா சாமி படங்களும் இங்கே இருக்கிறது. வீட்டு தோட்டத்தில் உள்ள செம்பருத்தி, மனோ ரஞ்சிதம் உள்ளிட்ட மலர்களை தோட்டக்காரர்கள் பரித்து தருவார்கள், அதை கடவுள் படத்திற்கு வைப்பேன். நான் சிரடி செல்லும்போது எனக்கு ஒருவர் கொடுத்தது பாபா சிலை. நான் மூன்று முறை சிரடிக்கு சென்றிருக்கிறேன். கோபாலபுரத்திற்கு புட்டபர்த்தி சாய்பாபா வரும்போது நான் பேசவில்லை. புட்டபர்த்தி செல்லும்போதுதான் சாய்பாபாவை பார்த்திருக்கிறேன்.
அவரது 80வது பிறந்த நாளிற்கு சென்றிருக்கிறேன். நண்பர் ஒருவர் ஆஞ்சநேயர் படத்தை கொடுத்தார்கள். அதுதான் உண்மையான ஆஞ்சநேயர் என்றும் கூறினார்கள். இப்போது தேர்தல் பரப்புரையின் போது வராகி அம்மன் படத்தை கொடுத்தார்கள். அதையும் இங்கே வைத்திருக்கிறேன். கோவில்களுக்கு போகும்போது நிறைய படங்கள் கொடுப்பார்கள். அதையெல்லாம் வைத்திருக்க இடம் இல்லை. அதையெல்லாம் கோவில்களுக்கு கொடுத்துவிடுவேன். வெள்ளியில் உள்ள ராமர், லட்சுமணன், ஆஞ்சநேயர் ஒன்றாக உள்ளது, இதை தெரிந்தவர் ஒருவர் கொடுத்தார். அதையும் இங்கே வைத்திருக்கிறேன். இது எனக்கு மிகவும் பிடிக்கும். காசியில் இருந்து அன்னபூரணி கொண்டு வந்து ஒருவர் கொடுத்தார்கள். இது மிகவும் முக்கியமான ஒன்று. இதுபோல சிவன் பார்வதி சேர்ந்து உள்ளது போல புகைப்படம் இருக்கிறது. மேலும் அங்காளம்மன் எங்களது குல தெய்வம். எனது கணவர் ஸ்டாலினுக்கும் அந்த அம்மன்தான் குல தெய்வம் எனக்கும்தான். தற்போது தேர்தல் நேரத்தில் அனைவரும் முருகர் வேலை எனக்கு கொடுக்கிறார்கள்” என்று அவர் பேசி உள்ளார்.