அணையா விளக்கு, 6 முகம் காயத்ரி தேவி சிலை – துர்கா ஸ்டாலின் பூஜை அறையில் என்ன இருக்கிறது?

Durga Stalin Pooja Room Visit Viral Video பெரும்பாலும் வெள்ளி விளக்குகள் நிறைந்துள்ள அந்த பூஜை அறையில் அணையா விளக்கு என்ற ஒன்றை வைத்திருக்கிறார்.

Durga Stalin Pooja Room Visit Viral Video Tamil
Durga Stalin Pooja Room Visit Viral Video Tamil

Durga Stalin Pooja Room Visit Viral Video Tamil : திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி என பல்வேறு விதமான விவாதங்கள் நடந்துகொண்டிருக்க, முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் பூஜை அறை டூர் வைரலாகப் பரவி வருகிறது. பத்திரிகையாளரான லோகநாயகி, நாயகி எனும் யூடியூப் சேனலை சொந்தமாக நடத்தி வருகிறார். இதில், சமீபத்தில் துர்கா ஸ்டாலினை சந்தித்து அவருடைய பூஜை அறையைச் சுற்றிக்காட்டி வீடியோ ஒன்றைப்பதிவு செய்திருந்தார். இது, தற்போது வைராலகப் பகிரப்பட்டு வருகிறது. அப்படி என்ன இருக்கிறது துர்கா ஸ்டாலின் பூஜை அறையில்?

Durga Stalin (PC: NayakiTV)

தினமும் காலையில் குளித்து முடித்து, 9 முதல் 9.30 மணி போல் பூஜை அறைக்கு வந்துவிடுவார் துர்கா ஸ்டாலின். பிறகு பால், பழங்கள் வைத்து விளக்கு ஏற்றி பூஜை செய்வது வழக்கம். பெரும்பாலும் வெள்ளி விளக்குகள் நிறைந்துள்ள அந்த பூஜை அறையில் அணையா விளக்கு என்ற ஒன்றை வைத்திருக்கிறார். எண்ணெய் தீரத்தீர,மீண்டும் எண்ணெய் ஊற்றி எந்நேரமும் அணையவிடாமல் அந்த விளக்கை மட்டும் எரிய வைத்துக்கொண்டே இருப்பாராம்.

செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கான சஷ்டி பாடல், திங்களுக்கு சிவபுராணம் என நாள்களுக்கு ஏற்றப் பாடல்களை ஒலிக்கச் செய்வது துர்காவின் வழக்கம். மேலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் பக்தி புத்தகங்களைப் பூஜை அறையில் அமர்ந்து படிப்பதும் அவருடைய வழக்கங்களில் ஒன்று. தன்னுடைய பழைய வீட்டில் சிறிய பூஜை அறை என்பதால், ஒரே புகைப்படத்தில் அனைத்து தெய்வங்களும் இருக்கும் பெரிய புகைப்படம் வைத்திருந்திருக்கிறார். ஆனால், இந்த புதிய வீட்டில், தனித்தனி புகைப்படங்களாக அடுக்கியுள்ளார்.

Karunanidhi with Puttaparti Sai Baba (PC: NayakiTV)

ஒவ்வொரு புகைப்படங்கள் மற்றும் சிலைகளுக்கும் பெரும்பாலும் தன் வீட்டில் பூத்த மலர்களையே சாட்டுகிறார். வெவ்வேறு நிறங்களில் செம்பருத்தி, செண்பகம், மனோரஞ்சிதம் என அத்தனையும் வீட்டிலேயே மலர்ந்த மலர்கள். மனித வடிவ தெய்வங்கள் என போற்றப்படும் ஷீரடி சாயிபாபா, புட்டபர்த்தி சாய் பாபா உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும் துர்கா ஸ்டாலின் பூஜை அறையில் உள்ளன.

இவர் அறையில் இருக்கும் ஏராளமான புகைப்படங்கள் மற்றும் சிலைகளில் பல அன்பளிப்பாக வந்தவை. அதில், அம்பானி தன் மகள் திருமண பத்திரிக்கை வைக்க வந்தபோது, அவர்கள் கொடுத்த 6 முகம் கொண்ட காயத்ரி சிலை, உண்மையான ஆஞ்சநேயர் படம், காசியிலிருந்து வாங்கிய அன்னபூரணி சிலை உள்ளிட்டவை அடங்கும். தங்களுடைய குலதெய்வ அங்காளபரமேஸ்வரி புகைப்படம், மறைந்த கருணாநிதி மற்றும் அவருடைய தாய் தந்தை புகைப்படம், துர்காவின் தாய், தந்தை மற்றும் பாட்டியின் புகைப்படம் ஆகியவையும் இவருடைய பூஜை அறையின் ஓர் அங்கமாக இருக்கிறது.

Nita Ambani, DUrga Stalin, Ambani and Stalin (PC: NayakiTV)

துர்கா, சில மந்திரங்களைப் படிப்பதோடு இந்த பார்ட் 1 காணொளி நிறைவு பெறுகிறது. அடுத்த பகுதி எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பை மேலும் அதிகமாகியிருக்கிறது இந்த வீடியோ.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Durga stalin pooja room visit viral video tamil

Next Story
சப்ப மூக்கி, பிராமணர், குடி பழக்கம் – நீலிமா ராணியின் அதிரடி பதில்கள்Television actress Neelima Rani Youtube Channel Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X