வெற்றியைக் கொண்டாடும் விழாவே விஜயதசமி.
நவராத்திரி பண்டிகையில், முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிதேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிதேவியையும் வழிபடுவது வழக்கம்.
இந்த முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்சி தரும் தினம்தான் விஜயதசமி.
அன்றைய தினத்தில், எந்த ஒரு காரியத்தைத் துவக்கினாலும் அது வெற்றிகரமாக முடியும் என்பது நம்பிக்கை.
கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு முதன்முதலில் எழுத்து கற்பிக்கும் ‘அட்சரப்யாசம்’ நிகழ்ச்சி விமரிசையாகக் கொண்டாடப்படும். அன்று ஒரு தட்டில் அல்லது தரையில் நெல்மணிகளைப் பரப்பி, அதில் குழந்தைகளின் விரல் பிடித்து அ என்ற முதல் எழுத்தை எழுதச் செய்வர். இவ்வாறு செய்வதன் மூலம், முப்பெரும் தேவியரின் ஆசியும் குழந்தைக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மேலும் சரஸ்வதி பூஜை அன்று ஏடு அடுக்கும் நாம், மறுநாள் விஜயதசமி தினத்தில், சரஸ்வதிதேவிக்கு கற்கண்டு கலந்த பால் நைவேத்தியம் செய்து ஏடு பிரிக்க வேண்டும்.
விஜயதசமி பூஜை செய்ய உகந்த நேரம்
செவ்வாய்க்கிழமை (அக். 24) மாலை 05.22 முதல் 06.59 வரை விஜயதசமி பூஜை செய்வதற்கான நல்ல நேரமாக கணிக்கப்பட்டுள்ளது.
வித்யாரம்பம்
காலை 6.00 மணி முதல் 8.50 மணிக்குள் முற்பகல் 10.25 மணிமுதல் 12.00 மணிக்குள் நல்ல நேரம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“