/indian-express-tamil/media/media_files/2025/06/02/pz3gI9QzKX5E91bIB1Ny.jpg)
How to Get Water Out of Your Ear
காதுக்குள் தண்ணீர் புகுவது ஒரு சாதாரண விஷயம். ஆனால் அதை வெளியேற்ற நாம் செய்யும் சில முயற்சிகள், உபயோகிக்கும் பொருட்கள் தான் காதுக்கு ஆபத்தாக முடிகிறது! விரலால் குடைவது, ஹேர்பின் அல்லது இயர் பட்ஸ் பயன்படுத்துவது போன்ற பொதுவான தவறுகளை நீங்கள் செய்து வருகிறீர்களா? இவை உங்கள் காதுகளுக்குத் தீங்கை விளைவிக்கும் என்கிறார் டாக்டர் கார்த்திகேயன்.
அப்படியானால், காதில் புகுந்த நீரை பாதுகாப்பாகவும், எளிதாகவும் வெளியேற்றுவது எப்படி? டாக்டர் கார்த்திகேயன் தரும் எளிய வழிமுறைகள் இங்கே:
உடனடி நிவாரணத்திற்கான எளிய வழிகள்:
மேற்பரப்பை சுத்தம் செய்யுங்கள்: முதலில், காதின் வெளிப்பகுதியில் ஒட்டியுள்ள தண்ணீரை ஒரு மென்மையான டவலால் ஒற்றி எடுங்கள். இது முதல் மற்றும் முக்கியமான படி.
காதை இழுத்து தலையை திருப்புங்கள்: உங்கள் காதின் பின் பகுதியை லேசாகப் பிடித்து பின்னோக்கி இழுங்கள். அதேசமயம், உங்கள் தலையை தண்ணீர் புகுந்த காது இருக்கும் திசையில் சாய்க்கவும். உதாரணத்திற்கு, இடது காதில் தண்ணீர் புகுந்திருந்தால், இடது பக்கம் தலையை சாய்த்து, காதை பின்னோக்கி இழுங்கள்.
இந்த நிலையில், ஒரு சூடான திரவம் வெளியேறுவது போன்ற உணர்வு ஏற்படும். தண்ணீர் தானாகவே வெளியேறிவிடும்
கழுத்து வலி உள்ளவர்களுக்கான மாற்று வழி:
கழுத்து வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கவலைப்பட வேண்டாம்! உங்களுக்கும் ஒரு எளிமையான வழி இருக்கிறது:
சௌகரியமாக படுத்துக் கொள்ளுங்கள்: காதுக்குக் கீழ் ஒரு மென்மையான டவலை வைத்துக்கொண்டு படுத்துக்கொள்ளுங்கள்.
காதை மட்டும் இழுங்கள்: மெதுவாக, காதின் வெளிப்புறப் பகுதியை மட்டும் பின்னோக்கி இழுங்கள். ஆட்டோமேட்டிக்காக காதில் உள்ள தண்ணீர் வெளியேறிவிடும்!
இந்த எளிய, பாதுகாப்பான வழிமுறைகள் மூலம் உங்கள் காதுகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். இனியும் ஹேர்பின், இயர்பட்ஸ் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி உங்கள் காதுகளுக்கு ஆபத்தை விளைவிக்காதீர்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.