இயர்போன்கள் நீண்ட நேரம் பயன்படுத்துவதற்கு நல்லதா? பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று, அதிலும் உங்கள் செவித்திறனைப் பாதிக்கும் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ENT நிபுணர் டாக்டர் ரச்சனா மேத்தா, காதுகளுக்குள் அணிந்திருக்கும் இயர்போன்கள் மற்றும் காதுகளில் அணியும் ஹெட்ஃபோன்களில் ஒன்றைத் தேர்வு செய்யும்படி கேட்டால், என்னுடைய தேர்வு ஹெட்ஃபோன்களாக இருக்கும். இயர்போன்கள் காது கால்வாயை (ear canal) நேரடியாக பாதிக்கின்றன என்று டாக்டர் மேத்தா கூறினார்.
டாக்டர் மேத்தாவின் கூற்றுப்படி, ear canal உள்ளே இயர்போன்கள் செருகப்படும்போது, அது காது மெழுகை காதுக்குள் ஆழமாகத் தள்ளும், இது அதிக அடைப்பை ஏற்படுத்தும்.
இரண்டாவதாக, இது நமது செவிப்பறையை (ear drum) நேரடியாகப் பாதிக்கிறது என்பதால், அதிகப்படியான ஒலி நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும்.
கூடுதலாக, இயர்போன்கள் காதுகளை முற்றிலுமாக அடைக்கும் என்பதால், அது ஈரப்பதத்தை தடுக்கிறது, இது தொற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது, என்று டாக்டர் மேத்தா கூறினார்.
மும்பையில் உள்ள நானாவதி மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் ENT மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் அமோல் பாட்டீல், குறிப்பாக இயர்போன்களை தொடர்ந்து மற்றும் நீண்ட நேரம் பயன்படுத்துவதால் சத்தத்தால் ஏற்படும் காது கேளாமை (NIHL) அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நகரங்களில், சுற்றுப்புற இரைச்சல் அளவுகள் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட WHO வரம்புகளை விட அதிகமாக உள்ளன, இது நீண்ட காலத்திற்கு இயர்போன்களைப் பயன்படுத்துவதுடன் கேட்கும் திறனை மோசமாக்குகிறது, என்று டாக்டர் பாட்டீல் கூறினார்.
எனவே, அறிவுறுத்தப்படுவது என்ன? நீங்கள் எப்போதாவது இயர்போன்களை சிறிது நேரம் பயன்படுத்தினால் பரவாயில்லை. ஆனால் கூட்டங்கள், சொற்பொழிவுகள் அல்லது இசை வீடியோக்களை பார்க்க நீண்ட நேரம் இயர்போன்களைப் பயன்படுத்தினால், ஹெட்ஃபோன்கள் சிறந்தது, என்று டாக்டர் மேத்தா கூறினார்.
இளைஞர்கள் அதிக அளவில் வால்யூம் கேட்பதை கட்டுப்படுத்துவது அல்லது அதிகபட்சமாக 60 சதவீதத்திற்கும் குறைவான வால்யூம் பராமரிப்பது மற்றும் முடிந்தால் noise-cancelling options பயன்படுத்துவது நல்லது. முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சை செய்வதற்கு வழக்கமான செவிவழி சுகாதார சோதனைகளை மேற்கொள்வது சிறந்தது, என்று டாக்டர் பாட்டீல் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.