ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை.. காரணமும் தீர்வும்!

Early male pattern baldness causes reasons changes Tamil News முந்தைய தலைமுறை ஆண்கள் தங்கள் 50 அல்லது 60-களில்தான் இந்த பிரச்சனையை எதிர்கொள்ளத் தொடங்கினார்கள். ஆனால், இப்போது விஷயங்கள் அப்படியா மாறிவிட்டன..

Early male pattern baldness causes reasons changes Tamil News
Early male pattern baldness causes reasons changes Tamil News

Early male pattern baldness causes reasons changes Tamil News : வாழ்க்கை முறை பழக்கம், உணவு, தூசி மற்றும் மாசுபாடு போன்ற வெளிப்புற காரணிகளால் முடி உதிர்தல் மிகவும் பொதுவானதாகிவிட்டது. பெண்களில் முடி உதிர்தலுக்கான தீர்வுகள் மற்றும் காரணங்களை நாம் அடிக்கடி பகிர்ந்து கொண்டாலும், ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை பிரச்சனைகளைப் பற்றிப் பார்ப்பதும் அவசியமான ஒன்றுதான்.

WebMd-ன்படி, வழுக்கை என்பது தலைமுடியின் பின்னடைவு மற்றும் முன் உச்சந்தலையிலிருந்து முடி படிப்படியாக மறைதல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட ஆண்களில் வழுக்கை இருப்பதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, சரும மருத்துவர் டாக்டர் கிரண் சமீபத்தில் ஒரு தகவல் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

வாழ்க்கை முறை மாற்றங்களைக் குற்றம் சாட்ட முடியும் என்றாலும், “சிறு வயதிலேயே ஆண்களுக்கு வழுக்கை பிரச்சினை சமீபத்திய காலங்களில் உண்மையான தொற்றுநோயாக மாறிவிட்டது” என்பதைக் கருத்தில் கொண்டு மற்ற சாத்தியமான காரணங்களை ஆழமாகப் பார்க்க வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

முந்தைய தலைமுறை ஆண்கள் தங்கள் 50 அல்லது 60-களில்தான் இந்த பிரச்சனையை எதிர்கொள்ளத் தொடங்கினார்கள். ஆனால், இப்போது விஷயங்கள் அப்படியா மாறிவிட்டன என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

காரணங்கள் என்னவாக இருக்கலாம்?

*பேக் செய்யப்பட்ட உணவாக இருந்தாலும் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவாக இருந்தாலும் சரி, அவற்றில் உணவில் சர்க்கரை அதிகமாக இருப்பது.
*அதிக கிளைசெமிக் உணவு உட்கொள்வது. இது இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தும் மற்றும் முடி உதிர்தலை அதிகரிக்கும்.
*சில வைட்டமின் குறைபாடு முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் என்பதால் வைட்டமின்களைச் சரிபார்க்காமல் போவது.
*நீங்கள் வாழும் வாழ்க்கை முறை உங்கள் தைராய்டை பாதிக்கலாம். இது ஆரம்பக்கால வழுக்கையை ஏற்படுத்தலாம்.
*புரதப் பவுடர்கள் முடி உதிர்தலையும் ஏற்படுத்தக்கூடும்.

என்ன செய்ய வேண்டும்?

“ஆரம்ப வழுக்கைக்கு சிகிச்சையளிக்க சில ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்யுங்கள்” என்று அவர் கூறினார். இருப்பினும், நீங்கள் தீவிர முடி உதிர்தலை அனுபவித்து, எந்த முன்னேற்றத்தையும் கவனிக்கவில்லை என்றால், சரியான நேரத்தில் ஒரு நிபுணரிடம் பேசுங்கள் என்று எச்சரிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Early male pattern baldness causes reasons changes tamil news

Next Story
உங்கள் வயிறு வீக்கம் அடையாமல் இருக்க இதை பின்பற்றுங்கள் – விஜய் டிவி ரம்யா சூப்பர் 5 டிப்ஸ்!Vijay Tv Ramya Viral Video Fitness Secrets Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express