New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/04/442226_5511702_2_updates-9.jpg)
Easter 2019
Happy Easter 2019 Wishes, Quotes, Messages in Tamil: ஏமாளி ஏவாள் சாத்தான் சூழ்ச்சியில் எளிதாக வீழ்ந்தார். ஏவாழுக்காக ஆதாமும் பாவத்தில் விழுந்தார்
Easter 2019
Easter 2019 : உலக வரலாற்றில் கிறிஸ்து இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சியை ஈஸ்டர் என கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
ஆதாம், முதல் மனிதனாக கடவுளால் படைக்கப்பட்டு, அவனில் இருந்து 60வது தலைமுறையில் கிறிஸ்து எனப்பட்ட தீர்க்கதரிசி, கடவுளின் மகனாக கன்னிப்பெண்வயிற்றில் பாலகனாக பிறப்பார் என்ற செய்தியை கூறும் பைபிள், "பாடுபட்ட சிலுவை மரணத்தைச் சந்திப்பார். மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்' என்றும் முன்னறிவித்தது.
இயேசுவின் உயிர்த்தெழுதலை குறிக்கும் ஈஸ்டர் பற்றி விரிவாக அறிய கிறிஸ்துவத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். உலகையும் அதன் சகல ஜீவராசிகளையும் சிருஷ்டித்த தேவாதி தேவன் தன்னுடைய சாயலாக ஆதாமையும், ஏவாளையும் உருவாக்கினார். ஏதேன் தோட்டத்தில் அவர்களோடு உலாவித் திரிந்தார். ஆனால் ஏமாளி ஏவாள் சாத்தான் சூழ்ச்சியில் எளிதாக வீழ்ந்தார். ஏவாழுக்காக ஆதாமும் பாவத்தில் விழுந்தார்.
உயிர் நீத்த இயேசுவை நினைவுக் கொள்ளும் நாள் புனித வெள்ளி!
ஈஸ்டர் பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை விளக்கி தனியாக சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.ரோம இதிகாசங்களில் ஈஸ்டர் என்ற பெண் கடவுள் விடியலுக்கான தேவதையாக சித்தரிக்கப்படுகிறார். இந்த தேவதையின் பெயர்தான் ஈஸ்டர் பண்டிகைக்கு சூட்டப்பட்டதாக மொழியாளர்கள் கூறுகின்றனர். ஈஸ்டர் என்ற வார்த்தைக்கு 'வசந்த காலம்' என்ற அர்த்தமும் உண்டு.
கிறிஸ்துவர்களின் மற்றொரு கிறிஸ்துமஸ் என அழைக்கப்படும் ஈஸ்டர் பெருநாளை அனைவருடனும் சேர்ந்துக் கொண்டாடுங்கள். உங்களது வாழ்த்து செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் சேர்ந்து பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
இயேசு கிறிஸ்து உயிர் தியாகம் செய்த புனித நாளின் வரலாறும், சிறப்பும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.