தேங்காய் உடைக்க தோசைக் கரண்டி... சீக்கிரம் கெடாமல் இருக்க இப்படி செஞ்சு வையுங்க!
நம் கிச்சனில் தவறாமல் இடம்பெறும் தேங்காயை திறம்பட எவ்வாறு பயன்படுத்துவது என இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக சில சிம்பிள் டிப்ஸ்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
நம் கிச்சனில் தவறாமல் இடம்பெறும் தேங்காயை திறம்பட எவ்வாறு பயன்படுத்துவது என இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக சில சிம்பிள் டிப்ஸ்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாள் சமையலிலும் தேங்காய் தவறாமல் இடம் பிடித்து விடும். அந்த அளவிற்கு தேங்காயின் பயன்பாடு கிச்சனில் அதிகமாக இருக்கும். அதன்படி, தேங்காயை எப்படி கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்வது உள்ளிட்ட சில டிப்ஸை காணலாம்.
Advertisment
ஃப்ரிட்ஜ் இல்லாமல் கூட மாசக்கணக்கில் தேங்காயை கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ள முடியும். இதற்கு சிம்பிளான ஒரு ட்ரிக்கை பின்பற்றினால் போதும். தேங்காயை வைக்கும் போது அதனை படுக்க வைக்காமல், நிமிர்த்தி வைத்திருக்க வேண்டும். இப்படி செய்தால் தேங்காய் சீக்கிரமாக கெட்டுப் போகாமல் இருக்கும்.
தேங்காயை உடைக்க அரிவாளை தான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். ஆனால், நிறைய பேர் வீட்டில் அரிவாள் இருக்காது. அந்த சூழலில் தோசைக் கரண்டியை கொண்டு தேங்காயை ஈசியாக உடைக்கலாம். முதலில் தேங்காயை ஒரு பாலித்தீன் பையில் போட்டு சுற்றிக் கொள்ள வேண்டும். இப்போது, தோசைக் கரண்டியை கொண்டு தேங்காயின் சுற்றுப் பகுதியில் தட்டினால், சுலபமாக உடைந்து விடும்.
தேங்காயை ஈசியாக துருவுவதற்கும் ஒரு டிப்ஸ் இருக்கிறது. அதன்படி, இட்லி பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அதில் தேங்காயை உடைத்து வைத்து விட வேண்டும். இதன் பின்னர், 5 நிமிடங்கள் கழித்து தேங்காயை வெளியே எடுத்து விடலாம். இதன் மூலம் தேங்காயை எளிதாக துருவ முடியும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்தால், நிறைய நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்.
Advertisment
Advertisements
பெரும்பாலும் தேங்காயை உடைத்த பின்னர், ஒரு பாதியை உடனடியாக பயன்படுத்தி விட்டு, மற்றொரு பாதியை அப்படி வைத்திருப்போம். இவை கெட்டுப் போகாமல் இருக்க ஃப்ரிட்ஜில் வைப்பார்கள். இதனை கெடாமல் பார்ப்பதற்கு ஒரு சூப்பரான டிப்ஸ் இருக்கிறது. அதன்படி, தேங்காயின் உட்பகுதியை தண்ணீர் இல்லாமல் துடைக்க வேண்டும். இப்போது, சிறிதளவு உப்பை இதில் தூவிக் கொள்ளலாம். இதன் மூலம் சுமார் 1 வாரம் வரை தேங்காய் கட்டுப் போகாமலும், நிறம் மாறாமலும் இருக்கும்.