10 ரூபாயில் பாத்ரூம் பளிச்சிடும்… இந்த டிரிக் யூஸ் பண்ணுங்க!

கடைகளில் விற்கப்படும் விலை உயர்ந்த கிளீனிங் பொருட்களை பயன்படுத்தினாலும் சில சமயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. ஆனால், இப்போது வெறும் ₹10 செலவில் உங்கள் குளியலறையை ஜொலிக்க வைக்க ஒரு எளிய வழி உள்ளது.

கடைகளில் விற்கப்படும் விலை உயர்ந்த கிளீனிங் பொருட்களை பயன்படுத்தினாலும் சில சமயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. ஆனால், இப்போது வெறும் ₹10 செலவில் உங்கள் குளியலறையை ஜொலிக்க வைக்க ஒரு எளிய வழி உள்ளது.

author-image
WebDesk
New Update
bathroom-tiles

10 ரூபாயில் பாத்ரூம் பளிச்சிடும்… இந்த டிரிக் யூஸ் பண்ணுங்க!

வீட்டில் பாத்ரூம் எப்போதும் பளிச்சென்று உப்பு கரை படியாமல் இருக்க வேண்டும் என்று நினைத்து அதற்காக நிறைய டிப்ஸ் பயன்படுத்தி சுத்தம் செய்துகொண்டே இருப்பார்கள். அப்படி சுத்தம் செய்யும் வேலை என்பது மிக கடினமாக இருக்கும். இனி நீங்கள் இதுமாதிரி கஷ்டப்பட வேண்டாம். உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.!

Advertisment

சமையலறை முதல் குளியலறை வரை வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். குறிப்பாக குளியலறையை சுத்தமாக வைத்திருக்க பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள். கடைகளில் விற்கப்படும் விலை உயர்ந்த கிளீனிங் பொருட்களை பயன்படுத்தினாலும் சில சமயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. ஆனால், இப்போது வெறும் ₹10 செலவில் உங்கள் குளியலறையை ஜொலிக்க வைக்க ஒரு எளிய வழி உள்ளது.

சூப்பர் கிளீனிங் முறை- தேவையான பொருட்கள்:

₹10 Eno பாக்கெட் (Eno இல்லையென்றால் 3 டீஸ்பூன் வினிகர் பயன்படுத்தலாம்), அரை எலுமிச்சை பழம், 2 ஸ்பூன் உப்பு (சுத்தம் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்), 1 ஸ்பூன் சமையல் சோடா, 3 டீஸ்பூன் பாத்திரம் கழுவும் லிக்விட் 

Advertisment
Advertisements

செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தில் Eno பொடியை கொட்ட வேண்டும். அதனுடன் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்துவிடுங்கள். பிறகு 2 ஸ்பூன் உப்பு மற்றும் 1 ஸ்பூன் சமையல் சோடாவை சேர்க்கவும். இறுதியாக 3 டீஸ்பூன் பாத்திரம் கழுவும் திரவத்தை ஊற்றவும். இப்போது இந்த கலவையை நன்றாக கலக்குங்கள். கலக்கும்போது அது நுரைத்து பொங்கி வரும். இந்த நுரைத்த கரைசலை உங்கள் குளியலறையின் தரை, டைல்ஸ், வாஷ்பேஷன் போன்ற அனைத்து இடங்களிலும் ஊற்றி சிறிது நேரம் ஊற விடவும். 

பிறகு பிரஷ் (அ) ஸ்க்ரப்பர் பயன்படுத்தி நன்றாக தேய்த்து கழுவினால், உங்கள் குளியலறை பளிச்சென்று சுத்தமாகிவிடும். விலை உயர்ந்த கிளீனிங் பொருட்கள் இல்லாமலேயே, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து குறைந்த செலவில் குளியலறையை சுத்தப்படுத்த இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்!

tips to clean bathroom tiles

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: