Advertisment

ரொம்ப நேரம் தூங்கிட்டீங்களா? டோண்ட் வொர்ரி.. இதோ ஈஸியான உணவு!

Instant Aval Upma: முழு நாளுக்கும் எனெர்ஜி தரும், காலை உணவை ஸ்கிப் செய்வதால், பல சிக்கல்கள் ஏற்படும்.

author-image
WebDesk
New Update
easy breakfast recipe, healthy breakfast, Aval Upma

ஈஸியான அவல் உப்மா

Easy Breakfast Recipe: காலையில் லேட்டாக எழும் காரணத்தால், பலர் காலை உணவை தவிர்த்து விடுவார்கள். முழு நாளுக்கும் எனெர்ஜி தரும், காலை உணவை ஸ்கிப் செய்வதால், பல சிக்கல்கள் ஏற்படும். ஆனால் பத்தே நிமிடத்தில் எளிய முறையில் ஒரு காலை உணவை தயாரிக்க முடியும் என்றால், அதை விட மகிழ்ச்சி ஏது..?

Advertisment

டிவியில் மேட்ச் பார்க்கும் நாய்… வீடியோ ஏன் வைரலாச்சுன்னு இப்போ தான் தெரியுது!

தேவையானப் பொருட்கள்

சிறிதளவு எண்ணெய்

1 - நறுக்கிய பச்சை மிளகாய்

2 தேக்கரண்டி - எலுமிச்சை சாறு

தேவைக்கேற்ப உப்பு

2 கப் - அவல்

¼ கப் - வேர்க்கடலை

அரை  தேக்கரண்டி - கடுகு

1 தேக்கரண்டி - சீரகம்

கால் தேக்கரண்டி - மஞ்சள் தூள்

அரை தேக்கரண்டி - சிவப்பு மிளகாய் தூள்

7-8 - கறிவேப்பிலை

செய்முறை

* அவலை நன்றாக தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்.

மெழுகுச் சிலை ஷிவானி, கிளாஸி வித்யா: முழு புகைப்படத் தொகுப்பு

* பானில் குறைந்த வெப்பத்தில் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். இது சூடான பிறகு, வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும். பின்னர் அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.

* இப்போது கூடுதலாக 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சிறிது சூடேற்றவும். அதில், சீரகம் மற்றும் கடுகு சேர்க்கவும். விதைகள் பிளவுபட ஆரம்பித்ததும், பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.

* அடுத்து, கறிவேப்பிலை சேர்த்து, பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது பொன்னிறமாக மாறும் வரை கிளறவும். பின்னர் உங்கள் சுவைக்கு ஏற்ப வேர்க்கடலை மற்றும் உப்பை சேர்க்கவும்.

* பின்னர் சிவப்பு மிளகாய் பொடி சேர்க்கவும். 2 நிமிடங்கள் கழித்து அவலை அதில் சேர்க்கவும். பின்னர் மெதுவாக கிளறி 2 நிமிடம் மூடி வைக்கவும்.

* இறுதியாக அதை ஒரு தட்டுக்கு மாற்றவும். பின்னர் சிறிது எலுமிச்சை சாற்றை அதில் கலந்து,  உங்கள் காலை உணவை என்ஜாய் செய்யவும்.

 

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Food Recipes Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment