குக்கரில் செட்டிநாட்டு சாம்பார்... இப்படி செஞ்சு அசத்துங்க!
ஆனாலும் நம்மூர்களின் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு விதமான சாம்பாருக்கு பெயர் பெற்றவை. உடனுக்குடனே மசாலாக்களை ரெடி செய்து சாம்பார் வைக்க நாம் தஞ்சைக்கு சென்றால், புளி கரைத்து ஊற்றி நல்ல நிறத்துடனும் மணத்துடனும் ஒரு சாம்பார் சாப்பிட காரைக்குடிக்கு தான் செல்ல வேண்டும். இல்லை என்றால் இந்த ரெசிபியை நீங்கள் வீட்டில் முயற்சி செய்து ஆச்சி வீட்டு சாம்பார் மணத்தை உங்கள் வீட்டுக்கும் கொண்டு வர முடியும்,.
தமிழக சமையலறைகளில் சாம்பாருக்கு என்று தனியிடம் உண்டு. நல்ல நாளா உடனே சாம்பார். வீட்டில் வேறெந்த காய்கறிகளும் இல்லையா அப்போதும் சாம்பார். வெள்ளிக்கிழமை விடிந்ததும் இட்லிக்கும் சாம்பார், மதியம் சாப்பாட்டிற்கும் சாம்பார். அந்த அளவுக்கு சாம்பாருக்கும் நமக்குமான ருசியான உறவை வார்த்தைகளால் சொல்லிவிட இயலாது.
Advertisment
ஆனாலும் நம்மூர்களின் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு விதமான சாம்பாருக்கு பெயர் பெற்றவை. உடனுக்குடனே மசாலாக்களை ரெடி செய்து சாம்பார் வைக்க நாம் தஞ்சைக்கு சென்றால், புளி கரைத்து ஊற்றி நல்ல நிறத்துடனும் மணத்துடனும் ஒரு சாம்பார் சாப்பிட காரைக்குடிக்கு தான் செல்ல வேண்டும். இல்லை என்றால் இந்த ரெசிபியை நீங்கள் வீட்டில் முயற்சி செய்து ஆச்சி வீட்டு சாம்பார் மணத்தை உங்கள் வீட்டுக்கும் கொண்டு வர முடியும்,.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு அரை கப் சாம்பார் காய்கறிகள் 200 கிராம் சிறிய வெங்காயம் ஒரு கப் தக்காளி 2 சாம்பார் பொடி 2 ஸ்பூன்
மிளகாய் தூள் மஞ்சள் தூள் 1 ஸ்பூன் புளி - நெல்லிக்காய் அளவு உப்பு தேவையான அளவு
தாளிக்க
பெருங்காயம் வெந்தயம்
பச்சை மிளகாய், கறிவேப்பிலை
செய்முறை
அடுப்பில் குக்கரை வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் விட்டு 1 ஸ்பூன் வெந்தயம், 2 ஸ்பூன் சீரகம், கருவேப்பில்லை, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
2 சிட்டிகை மிளகாய் தூள், மூன்று சிட்டிகை சாம்பார் தூள், ஒரு சிட்டிசை பெருங்காயம், ஒரு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும், பிறகு தயார் செய்து வைத்திருந்த மசாலாவுடன் நறுக்கி வைத்திருந்த காய்கறிகளை சேர்க்கவும். பிறகு ஊற வைத்த துவரம்பருப்பை அந்த காய்கறியுடன் சேர்த்து நன்றாக கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை நன்றாக மூடி நான்கு - முதல் ஐந்து விசில் வந்த பிறகு அடுப்பை அணைக்கவும். பிறகு தனியாக ஊற வைத்த புளியை நன்றாக கரைத்து சாம்பாரில் ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைக்கவும். சுவையான ஈசியான சாம்பார் ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil