மிகவும் ஈஸியான கிச்சன் ட்ரிக்ஸ் பாக்கலாம். இதை வைத்து வீட்டை அழகாக மாற்றலாம். அதிகம் காசு செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
டிப்ஸ் 1: ஒரு பவுலில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் பழைய நெயில் பாலிசிகளை பாட்டிலோடு போடவும். பின்னர் இதனை ஒரு இரண்டு முதல் மூன்று நிமிடம் கழித்து எடுக்க வேண்டும். கட்டியாக உள்ள நெயில் பாலிஷ் எப்போதும் போல கைகளில் வைப்பதற்கு தகுந்தார் போல மாறிவிடும்.
டிப்ஸ் 2: கிச்சன் டைல்ஸில் உள்ள உப்பு கரைகள் நம் கிச்சன் அழகையே மாற்றிவிடும். அதற்காக என்னதான் டைல்ஸ் க்ளீனர் பயன்படுத்தினாலும் போகாது.
அதற்கு ஒரு சின்ன டிப்ஸ் உள்ளது. இதை பயன்படுத்தினால் உப்பு கரை பிடிக்காத மாதிரி எப்படி சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: கல் உப்பு, எலுமிச்சை சாறு, சோப்புத்தூள், காஸ்டிக் சோடா
எவ்வளவு கறையா இருந்தாலும் 10 நிமிடத்தில் கிளீன் பண்ணலாம் | kitchen Cleaning Tips in tamil
இவை அனைத்தையும் கலந்து கொள்ளவும் நன்றாக இதை நன்றாக கரைத்து இரும்பு நாறு வைத்து கரை உள்ள இடங்களில் போட்டு தேய்த்து விட்டாலே போதும் உப்பு கரை நீங்கி பளிச்சென்று மாறிவிடும். ஒரு இரண்டு முறை தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவவும்.
இது காய்ந்த பிறகு உப்பு கரை இருப்பது போல வெளுத்து தெரியும். அப்படி தெரியாமல் இருப்பதற்கு தேங்காய் எண்ணெய் ஒரு காட்டன் துணியில் இரண்டு சொட்டுக்கள் விட்டு அந்த இடத்தில் தேய்த்து விட்டாலே போதும் எண்ணெய் பிசுக்குகளால் தண்ணீர் ஒட்டாமல் கதையும் படியாமல் இருக்கும்.
இதை செய்யும் போது கைகளில் கையுறை பயன்படுத்த வேண்டும். உப்பு கரை படிந்துள்ள அனைத்து இடங்களிலும் இதை பயன்படுத்தலாம்.
இந்த தகவல்கள் அனைத்தும் Pinnacleplatetamil என்ற யூடியூப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது.