ஒரு பழைய சேலை இருந்தால் போதும்... வீட்டுக்கான டோர்மேட்டை நீங்களே செய்து கொள்ளலாம்!

பழைய சேலை கொண்டு டோர்மேட் செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம். இதன் மூலம் உங்கள் வீட்டிற்கு தேவையான டோர்மேட்டை நீங்களே செய்து கொள்ள முடியும்.

பழைய சேலை கொண்டு டோர்மேட் செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம். இதன் மூலம் உங்கள் வீட்டிற்கு தேவையான டோர்மேட்டை நீங்களே செய்து கொள்ள முடியும்.

author-image
WebDesk
New Update
Doormat

வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் பலவற்றை கடைகளில் இருந்து வாங்குவோம். ஆனால், அவற்றை நாமே செய்தால் செலவு மிச்சமாவதுடன், நம் மனதிற்கும் நெருக்கமானதாக அமையும். அப்படி அனைவரின் வீட்டிற்கும் மிக முக்கிய தேவையாக இருக்கும் டோர்மேட் செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம்.

Advertisment

நீங்கள் பயன்படுத்திய பழைய சேலையை கொண்டு டோர்மேட்டை செய்ய முடியும். குறிப்பாக, காட்டன் சேலைகளாக இருந்தால் அவை ஈரத்தை உறிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும். அதன்படி, சேலையை இரண்டு பிரிவுகளாக எடுத்து, ஆறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஆனால், சேலையின் அடிப்பகுதி வரை வெட்டாமல், இறுதிப் பகுதியை மட்டும் அப்படியே விட வேண்டும். பின்னர், இதனை இரண்டு பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

இப்போது உங்கள் கைகளில் இரு பிரிவுகளாக, ஆறு துண்டுகள் இருக்கும். இதனை ஜடை பின்னுவது போன்று தனித்தனியாக பின்னிக் கொள்ள வேண்டும். இதன் பின்னர் இரு பாகத்தின் அடிப்பகுதியையும், சேர்த்து நூலால் இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும். 

இதையடுத்து, முறுக்கு பிழிவதைப் போல் சேலை பின்னலை வட்டவடிமாக சுற்ற வேண்டும். இதில் சீரான இடைவெளியில் ஊசி நூல் கொண்டு தைக்க வேண்டும். இவ்வாறு சுற்றி முடித்தால் வீட்டிற்கு தேவையான டோர்மேட் தயாராகி விடும்.

Advertisment
Advertisements

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: