வேர்க்கடலை திண்ண ஓடை தூக்கிப் போடாதீங்க... உங்க வீட்டை இப்படி கலர்புல்லா ஜோடிங்க!
குப்பையில் வீசும் வேர்க்கடலை ஓடுகளை சேர்த்து அசத்தலான பார்ட்டி லைட் எப்படி உருவாக்குவது என இந்தப் பதிவில் காணலாம். இதனை வீட்டிற்கு அலங்கார பொருளாக பயன்படுத்தலாம்.
வேர்க்கடலை சாப்பிட்ட பின்னர் அதன் ஓடை தூக்கி குப்பையில் தான் வீசுவோம். ஆனால், குப்பையாக கருதப்படும் அந்த ஓடுகளை வைத்து நம்மால் அலங்காரப் பொருளை செய்ய முடியும். இதற்கான செய்முறையை தற்போது பார்க்கலாம்.
Advertisment
இரண்டு படி வேர்க்கடலை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் இருந்து ஓடுகளை மட்டும் பிரித்து எடுக்க வேண்டும். இதன் பின்னர், தடிமனான பலூனை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது பலூனை ஓரளவிற்கு பெரிதாக ஊதி விட்டு, அதன் மீது வேர்க்கடலை ஓடுகளை பசை தடவி ஒட்ட வேண்டும்.
இவ்வாறு பலூன் முழுவதும் வேர்க்கடலை ஓடுகளை ஒட்டிக் கொள்ள வேண்டும். இவற்றை ஒட்டி முடித்ததும் பலூனை மட்டும் தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம். பலூனை தனியாக வெட்டி எடுத்தாலும் வேர்க்கடலை ஓடுகளை ஒட்டி இருப்பதால், அவை உடைந்து போகாமல் அப்படியே இருக்கும்.
இதன் பின்னர், வேர்க்கடலை ஓடுகள் மீது தங்க நிறத்திலான பெயிண்ட் அடித்துக் கொள்ளலாம். இதையடுத்து, பெயிண்ட் காய்ந்ததும் இதற்கு நடுவே பல்பை மாட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு பல்ப் மாட்டி அதனை ஒளிரச் செய்தால் பார்ப்பதற்கு சூரியன் போன்று அழகாக காட்சியளிக்கும்.
Advertisment
Advertisements
இரவு நேரத்தில் இந்த பல்பை ஒளிரச் செய்தால் பார்ப்பதற்கு பார்ட்டி நடைபெறுவதை போல் இருக்கும். இதனை பார்ப்பவர்கள் நிச்சயம் நிறைய பணம் கொடுத்து கடையில் இருந்து வாங்கியதாக கருதுவார்கள். தேவையில்லாத குப்பை எனக் கருதும் பொருளில் இருந்து அழகான பொருட்களை நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும்.