நாம் பயன்படுத்தி தற்போது உபயோகத்தில் இல்லாமல் இருக்கும் துணிகளைக் கொண்டு, வீட்டுக்கு தேவையான பொருட்களை செய்வது எப்படி என தற்போது காணலாம்.
ஆண்கள் பயன்படுத்தும் பழைய சட்டையை எடுத்து அதன் கைப்பகுதியை தனியாக வெட்டி எடுத்து விட வேண்டும். இதன் பின்னர், சட்டையை முன் பகுதி தனியாகவும், பின்பகுதி தனியாகவும் வெட்டி எடுத்துக் கொள்ளலாம். இப்போது இதன் முன்பகுதி பார்ப்பதற்கு சமையற்கலைஞர்கள் பயன்படுத்தும் ஏப்ரான் போன்று காட்சியளிக்கும். இதன் பக்கவாட்டின் இரு புறமும் கயிறு போன்று துணியை தைத்து இதை ஏப்ரானாக பயன்படுத்தலாம். பாத்திரம் கழுவும் போது, சமையல் செய்யும் போது இது மிகவும் உதவியாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/18/S6Q0VSdxpd1GfkNQpmEG.png)
இதேபோல், பழைய பனியனை எடுத்து அதன் மேற்பகுதியை தனியாக வெட்டி எடுத்து விட வேண்டும். இப்போது, பனியனை ஒரு இன்ச் இடைவெளியில் தனித்தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம். இவற்றை நன்றாக இழுத்துக் கொண்டு, மீண்டும் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இப்போது அனைத்து துண்டுகளையும் மொத்தமாக சேர்த்து கோர்த்தால், துடைக்க பயன்படுத்தும் துணி தயாராகி விடும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/18/dvPQ7TgqVEM2Qr0TLpt2.png)
மேலும், பழைய துணிகள் அதிகமாக இருந்தால் அவை அனைத்தையும் சிறிய மஞ்சப்பையில் போட்டு தைத்து விட வேண்டும். இது பார்ப்பதற்கு சிறிய குஷன் போன்று இருக்கும். இதன் மேற்புறத்தை மறைப்பதற்காக பழைய டீசர்ட்டை உறையாக தைத்து பயன்படுத்தலாம்.