Advertisment

உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கும் 4 பொருட்கள்!

தண்ணீரில் கிராம்பை ஊறப்போட்டு குடித்து வருவது உடலுக்கு நன்மையளிக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
easy digestion foods

easy digestion foods

easy digestion foods: உணவின்றி உயிரில்லை. சாப்பிட்ட உணவு சரிவர ஜீரணமாகி, உணவுச் சத்துக்கள் உடலில் சேர வேண்டும். எனவே ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவது அவசியம். ஆரோக்கிய உணவை உட்கொண்டால் மட்டும் போதாது. அது சரிவர ஜீரணமாக வேண்டும். வாழ்கையின் முக்கிய மூன்று அம்சங்கள். உணவு, நல்லுறக்கம், ஒழுங்கான தாம்பத்ய உறவு. ஆயுர்வேதம் உணவை சாப்பிடும் வழிகளை சொல்லித்தருகிறது.

Advertisment

அஜீரண அறிகுறிகள் – வயிறு உப்புசம், சங்கடமான உணர்வு, சில சமயங்களில் வலி, பசியின்மை நாம் உட்கொள்ளும் உணவை உடலுக்கேற்றதாக மாற்றி அமைப்பதை ஜீரண சக்தி என்கிறோம். முன்பே கூறிய படி உணவை சத்தாக மாற்றும் சக்தியை ‘ஜாடராக்னி’ (ஜடரம் – வயிறு, அக்னி – நெருப்பு) என்கிறது ஆயுர்வேதம்.

இந்த ‘சூடு’ உணவு ஜீரணமாக உதவும். கடுகு, மிளகு, கொத்தமல்லி, மிளகாய் முதலான பொருட்கள் இந்த “சூட்டை” குறையவிடுவதில்லை. அதிக உணவை உண்ணுதல், காலம் தவறி உண்ணுதல் இவற்றுக்கெல்லாம் முதலுதவி ‘வெந்நீர்’ குடித்தல். கனமான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த

பானங்கள் / நீர் அருந்துவதை தவிர்த்து சுடுநீர் குடிக்கவும். இப்போது ஜீரன சக்தியை அதிகரிக்க உணவில் சேர்க்க வேண்டிய உணவுப்பொருட்களை பார்க்கலாம்.

 1. இஞ்சி

வயிற்றுப் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் அதற்கு சிறந்த மருந்து இஞ்சி மட்டுமே. ‘ஹீலிங் புட்ஸ்' என்ற உணவில் “இஞ்சி குடலை பாதுகாக்கிறது. இரைப்பை குடல் வழியாக உணவு இயக்கத்தை துரிதப்படுத்துகிறது. உடலில் ஏற்படும் வாயுப் பிடிப்புகளை குறைக்கிறது. நாவின் சுவை மொட்டுக்களை

விழிப்படையச் செய்கிறது” ஆயுர்வேதத்தில் இஞ்சியை அக்னி என்று குறிப்பிடுகின்றனர். இது உடலின் செரிமான நெருப்பை ஊக்குவிக்கிறது. “ஆயுர்வேத வீட்டு வைத்திய முறைகள்” என்ற புத்தகத்தில் “ஒவ்வொரு முறையும் உணவிற்கு முன் இஞ்சியுடன் சிறிது எலுமிச்சை சாறுகலந்து அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டு வந்ததால் செரிமான சக்தி அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 

 2. கருப்பு மிளகு

கருப்பு மிளகில் உள்ள பைபர்னைன் என்ற கலவையால் நிறைந்துள்ளது. இது செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இயற்கையாகவே மிளகானது உணவை நமது உடலில் ஏற்றுக்கொள்ள வைக்கும் அளவிறு செரிமானத்தை மேம்படுத்துகிறது. மிளகு ஹைட் ரோ குளோரிக் அமிலத்தின் சுரப்பை அதிகரிக்கிறது.

3. ஓமம் 

ஓமத்தில் செரிமானத்தை அதிகரிக்கும் என்சைம்கள் உள்ளது. ஆரோக்கியமானவகையில் இதை அன்றாடம் பயன்பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் சீரகம், ஓமம், 1/2 டீஸ்பூன் இஞ்சி பொடி ஆகியவைற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இதனால் செரிமான சக்தி அதிகரித்து

மலச்சிக்கலை குறைக்கிறது.

 4. கிராம்பு

கிராம்பு அனைத்து விதமான வயிறு மற்றும் குடல் பிரச்னைகளை தீர்க்கக் கூடியது. கிராம்பு டீ போட்டு தினம் குடித்து வரலாம். அல்லது தண்ணீரில் கிராம்பை ஊறப்போட்டு குடித்து வருவது உடலுக்கு நன்மையளிக்கும்.

Healthy Life Food Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment