வீட்டை சுத்தமாக பராமரிப்பதே சவாலான காரியம். அதனை திறம்பட மேற்கொள்வதற்காகவே நிறைய மெனக்கெடல் இருக்க வேண்டும். ஆனால், இவற்றை எளிமையாக செய்து முடிப்பதன் மூலம் நமக்கு நிறைய நேரம் மிச்சமாகும். அந்த வகையில் வீட்டு வேலைகளை எளிமையாக மாற்றுவதற்கான சில டிப்ஸை தற்போது பார்க்கலாம்.
Advertisment
சமையலுக்கு வாங்கிய வாழைக்காய்களை தோல் சீவி விட்டு உடனடியாக பயன்படுத்தாவிட்டால் அவை கருத்துப் போகும். இதனை எளிமையாக நம்மால் தடுக்க முடியும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிறைத்து, அதில் சிறிதளவு மோர் மற்றும் உப்பு சேர்த்து கலக்க வேண்டும். இப்போது வெட்டி வைத்த வாழைக்காயை அந்த தண்ணீரில் போட்டு வைத்தால், அவை சீக்கிரம் கருத்துப் போகாது.
பாத்திரம் கழுவ வாங்கிய லிக்குயிட் தீர்ந்து போன பின்னர் அதன் பாட்டிலை குப்பையில் போட வேண்டாம். அதை வைத்து நம் வீட்டில் இருக்கும் மின் விசிறியை சுத்தப்படுத்த முடியும். இந்த பாட்டிலின் பக்கவாட்டு பகுதியை வெட்டி விட வேண்டும். கத்தியை நெருப்பில் வாட்டி இதனை ஈசியாக வெட்டி விடலாம். இப்போது ஒரு துணியை இந்த பாட்டிலின் பக்கவாட்டு பகுதி வழியாக உள்ளே நுழைத்து, அது கீழே விழாமல் இருக்க நூல் கட்டி விட வேண்டும்.
இப்போது, பாட்டிலின் நடுப்பகுதியில் சிறிய துவாரமிட்டு, மாப்பில் இருக்கும் குச்சியை இதில் வைக்க வேண்டும். இதை வைத்து மின் விசிறியை சுலபமாக துடைக்கலாம். இப்படி செய்தால் எவ்வளவு நாட்கள் அழுக்கான மின் விசிறியாக இருந்தாலும் எளிதாக துடைக்க முடியும்.
Advertisment
Advertisement
வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சி தொல்லையை போக்குவதற்கு ஒரு எளிமையான டிப்ஸ் இருக்கிறது. 7 அல்லது 8 கிராம்புகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர், இந்த தண்ணீரை வடிகட்டி அதில் ஒரு ஸ்பூன் ஆப்ப சோடா, சிறிதளவு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். இந்த தண்ணீரை மீண்டும் வடிகட்டி, கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடங்களில் தெளித்து விடலாம். இவ்வாறு செய்தால் கரப்பான் பூச்சிகளின் தொல்லை இருக்காது.