பழைய லெக்கின்ஸ் இருந்தா தூக்கிப் போடாதீங்க... அதை இப்படிக் கூட யூஸ் பண்ணலாம்!
பயன்படுத்த முடியாத பழைய லெக்கின்ஸைக் கொண்டு எப்படி நமக்கு உபயோகமான சில பொருட்களை தயாரிக்கலாம் என இதில் பார்க்கலாம். இந்த சிம்பிளான டிப்ஸை பின்பற்ற சுலபமாக இருக்கும்.
இன்றைய சூழலில் லெக்கின்ஸ் அணிவதற்கு நிறைய பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். உடுத்துவதற்கு இவை சௌகரியமாக இருப்பதில் தொடங்கி பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதனால், லெக்கின்ஸை பலரும் விரும்புகின்றனர். ஆனால், பயன்படுத்த முடியாத பழைய லெக்கின்ஸைக் கொண்டு நமக்கு உபயோகமாக சில பொருட்கள் செய்வது எப்படி என தற்போது காண்போம்.
Advertisment
அதன்படி, லெக்கின்ஸின் அடிப்பகுதியை ஒரு இன்ச் அளவிற்கு வெட்டி எடுத்துவிட வேண்டும். இதனை கைகளால் நன்றாக இழுத்து விட வேண்டும். இதேபோல், லெக்கின்ஸின் மேற்பகுதி வரை பல துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம். அவற்றை மடக்கி திரி போன்று வெட்டிக் கொள்ள வேண்டும். இப்போது லெக்கின்ஸின் மேற்பகுதியில் கை அளவிற்கு வெட்டி எடுக்க வேண்டும்.
இப்போது, முதலில் சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்த பாகங்களை இவற்றுடன் சேர்த்து தைக்க வேண்டும். இப்போது லெக்கின்ஸின் மற்றொரு முனையையும் இவ்வாறு வெட்டி எடுத்து க்ளவுஸ் வடிவத்தில் தைத்துக் கொள்ளலாம். இப்படி செய்தால் க்ளீனிங் க்ளவுஸ் தயாராகி விடும். இதனைக் கொண்டு சுவர், டைல்ஸ் போன்றவற்றை எளிதாக சுத்தப்படுத்தலாம்.
லெக்கின்ஸின் இடுப்பு பகுதியில் வளைவாக மார்க் செய்து விட்டு, அதே வடிவத்திற்கு வெட்டிக் கொள்ளலாம். மேலும், கால் பகுதியையும் ஒரு இன்ச் அளவிற்கு வெட்டி இழுத்து விட்டுக் கொள்ளலாம். இவற்றையும் ஓரத்தில் தைத்தால், பணம் வைத்து பயன்படுத்துவதற்கான பர்ஸ் தயாரித்து விடலாம்.
Advertisment
Advertisements
மேலும், லெக்கின்ஸின் கால் பகுதியை அரை இன்ச் இடைவெளியில் வெட்டி நன்றாக இழுத்து விட வேண்டும். இதனை சட்டை தொங்க விடும் ஹேங்கரில் முடிச்சி போட்டு மாட்டி விடலாம். இவற்றில் வீட்டில் இருக்கும் துப்பட்டாக்களை தொங்க விட முடியும்.
இவ்வாறு பயன்படுத்த முடியாத லெக்கின்ஸைக் கொண்டு நமக்கு பயனுள்ள சிலவற்றை செய்து கொள்ள முடியும்.